கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி ஜாமின் மனு தள்ளுபடி
கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதியின் ஜாமின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
Recommended Video

கோவை : பேராசிரியர் பணி நியமனத்திற்கு லஞ்சம் வாங்கியதாகக் கைது செய்யப்பட்ட கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதியின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி சில தினங்களுக்கு முன் தனது வீட்டில் வைத்து ரூ.30 லட்சம் லஞ்சம் வாங்கிய போது கையும் களவுமாக பிடிபட்டார். அவரிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் மேலும் பலர் சம்பந்தப்பட்டு இருப்பதாக தெரியவந்ததை அடுத்து போலீஸார் தங்களது விசாரணை வளையத்தின் கீழ் அனைவரையும் கொண்டு வந்துள்ளனர். துணைவேந்தருக்கு உதவியாக இருந்த பேராசிரியர் மற்றும் துணைவேந்தரின் மனைவி ஆகியோரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. தற்போது அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், இவர்கள் ஜாமின் கேட்டு கோவை லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். ஆனால், அவர்களுக்கு ஜாமின் வழங்க தமிழக அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து இரு தரப்பு வழக்கறிஞர்களும் காரசார வாதம் நடந்தது. இதனையடுத்து, ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி ஜான் வினோ உத்தரவிட்டார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications