அமெரிக்கக் கப்பலில் கைதான 35 பேருக்கும் நிபந்தனை ஜாமீன்: கோர்ட் உத்தரவு
தூத்துக்குடி: கைது செய்யப்பட்டு 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கைத் தாக்கல் செய்யப்படாதக் காரணத்தால் அமெரிக்கக் கப்பலில் கைது செய்யப்பட்ட 35 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி, தூத்துக்குடி முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
இந்தியக் கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்ததற்காக கடந்த அக்டோபர் 12-ஆம் தேதி அமெரிக்கக் கப்பல் ஒன்று சிறைபிடிக்கப் பட்டது. இந்த வழக்கில் கைது கைது செய்யப்பட்ட 35 பேரில் 12 பேர் இந்தியர்கள் என்பதால் அவர்கள் பாளையங்கோட்டை மத்திய சிறையிலும் உக்ரைன், இங்கிலாந்து, எஸ்தோனியா ஆகிய வெளிநாட்டைச் சேர்ந்த 23 பேர் சென்னை புழல் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. அதன்படி, சென்னையில் உள்ள 23 பேரும் வியாழக்கிழமை மாலை விடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது, 60 நாள்களுக்குள் க்யூ பிரிவு போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால், அவர்களுக்கு ஜாமீன் வழங்குவதாக தூத்துக்குடி முதலாவது நீதித்துறை நடுவர்மன்ற நீதிபதி கதிரவன் உத்தரவிட்டார்.
மேலும், ஜாமீன் பெறும் 35 பேரும் தலா ரூ.10 ஆயிரத்தை வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும் எனவும், தூத்துக்குடி அண்ணா நகரில் உள்ள க்யூ பிரிவு காவல் நிலையத்தில் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையிலும் இந்த ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கான உத்தரவு, இன்று பாளையங்கோட்டை மற்றும் சென்னை புழல் சிறையில் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் என்றும், உத்தரவு கிடைத்ததும் 35 பேரும் ஜாமீனில் வெளியே வருவார்கள் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
-
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications