குற்றாலத்தில் சாரல் மழை.. அருவிகளில் தண்ணீர்வரத்து அதிகரிப்பு.. மகிழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
நெல்லை: குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகத்தோடு குளித்து சென்ற வண்ணம் உள்ளனர்.
குற்றாலத்தில் ஜூன் முதல் செப்டம்பர் வரை சீசன் காலமாகும். தென்மேற்கு பருவமழை காலத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்யும் மழையால் அருவிகளில் தண்ணீர் ஆர்பரிக்கும்.

இந்நிலையில் அருவிகளின் நகரமாக விளங்கும் குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் வரத்து வெகுவாக குறைந்து பாறையை தொட்டு தண்ணீர கொட்டிய நிலையில் காணப்பட்டது. தற்போது சாரல் மழை பெய்து வருவதால் மெயினருவி, ஐந்தருவியில் தண்ணீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குளிக்க வரிசையில் நிற்காமல் சென்று குளித்து சென்ற வண்ணம் உள்ளனர். மேலும் வனப்பகுதியில் சாரல் மழை பெய்து வருவதால் அருவிக்கு தண்ணீர்வரத்து கூடியுள்ளதால் விடுமுறை நாளான நாளையும், நாளை மறுநாளும் திரண்டுவரும் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து செல்ல வசதியாக தண்ணீர் கொட்டுகிறது.
வனப்பகுதியில் இந்த மழை நீடித்தால் மட்டுமே குற்றலத்தில் இன்னும் சீசன் களைகட்டும் என்பதில் ஐயமில்லை. இருப்பினும் தற்போது கொட்டும் நீரில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து சென்றவண்ணம் உள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications