சினிமாவுக்கு கூட்டிச் செல்ல மறுத்த கணவர்... கோபத்தில் இளம்பெண் தற்கொலை
கோவை: கோவையில் கணவர் சினிமாவுக்கு அழைத்துப் போகாததால், மனமுடைந்த மனைவி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை ஆவாரம்பாளையம் நவஇந்தியா சாலையை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி சத்ய பிரியா(31). இவர்களுக்கு திருமணமாகி 8 வருடங்கள் ஆகிறது. ஒரு மகன் உள்ளார்.
இந்நிலையில், நேற்று சத்யபிரியா தனது கணவரை சினிமாவுக்கு அழைத்துள்ளார். ஆனால் அழைத்துச் செல்ல பழனிசாமி மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சத்யபிரியா விஷமருந்தினார்.
மயக்கமடைந்த சத்யபிரியாவை குடும்பத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
இது குறித்து பீளமேடு போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதலர் தற்கொலை:
இதேபோல், கோவை ஹோப்ஸ் கல்லூரி அருகே உள்ள பி.ஆர்.புரத்தை சேர்ந்தவர் ஜெய்சங்கர்(29). தனியார் நிறுவன ஊழியர் இவர் ஒரு பெண்ணைக் காதலித்து வந்துள்ளார்.
நேற்று மாலை ஜெய்சங்கர், தனது காதலியை சினிமாவுக்கு அழைத்துள்ளார். ஆனால் அவர் வர மறுத்து விட்டதாக தெரிகிறது.
இதனால் மனமுடைந்த ஜெய்சங்கர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பீளமேடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-
இறுதிச் சடங்குகளை மேற்கொண்ட அஜித் குமாரின் சகோதரர்.. மோகினி மணி உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications