விருதுநகரில் வெற்றி பெறுவாரா சி.பி.எம் சாமுவேல்ராஜ்

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: விருதுநகர் லோக்சபா தொகுதியில் சிபிஐ (எம்) வேட்பாளராக கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே. சாமுவேல்ராஜ் (வயது 46) போட்டியிடுகிறார்.

தலித் வகுப்பைச் சேர்ந்த இவர் +2 வரை படித்துள்ளார். 1986ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து 28 ஆண்டுகளாக கட்சியின் முழுநேர ஊழியராக பணியாற்றி வருகிறார்.

CPI(M) files K.Samuvel for Viruthunagar Seat

இவருக்கு பி. சுகந்தி (அனைத்திந்திய ஜனநயாக மாதர் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர்) என்ற மனைவியும், சிந்தியா, சுபாஷினி என்ற இரண்டு மகள்களும் உள்ளனர்.

அருந்ததியர் மக்களுக்கான உள்இட ஒதுக்கீடு மற்றும் மாநிலம் முழுவதும் ஆலய நுழைவு போராட்டங்கள் உள்ளிட்டு பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றவர். குடியாத்தம் தலித் மக்களின் வீடுகள் இடிக்கப்பட்டதை கண்டித்து நடத்திய போராட்டத்தில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு 7 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

தற்போது தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொதுச் செயலாளராக பணியாற்றி வருகிறார்.

ஜாதி வாக்குகளை குறிவைத்து பிற கட்சியினர் வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். பொதுத் தொகுதியில் தலித் வேட்பாளர் களம் இறங்குகிறார். போட்டியாளர்களை வென்று கரையேற வேண்டும் என்பது கம்யூனிஸ்ட் கட்சியினரின் விருப்பமாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+