நாடாளுமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி நீடிக்கும்: ஜி.ராமகிருஷ்ணன்
சென்னை: நாடாளுமன்றத் தேர்தலிலும் அதிமுக உடன் தங்களின் கூட்டணி தொடரும் என்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு கட்சிகள் தயாராகிவருகின்றன. கடந்த 2009 ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட கட்சிகள் இந்த தேர்தலில் தனித்தனியாக போட்டிய தயாராகி வருகின்றன.
இதனையடுத்து அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய கட்சிகள் தலைமையில் 4 முனை போட்டி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாஜக அணியில் மதிமுக
மதிமுக, தேமுதிக கட்சிகள் பாஜகவில் இணையும் என்று கூறப்படும் நிலையில் இடதுசாரி கட்சிகளில் மார்க்சிஸ்ட் கட்சியும் அணி மாறும் என்று தகவல்கள் வெளியாகின.

இடதுசாரிகள் நிலை
சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உள்ளிட்ட இடது சாரிகள் இடம் பெற்றிருந்தனர். நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி தொடரும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தா.பாண்டியன் சில தினங்களுக்கு முன்பு அறிவித்தார்.

மார்க்சிஸ்ட் கட்சி
நாடளுமன்றத் தேர்தலில் கூடுதல் இடங்களில் போட்டியிட மார்க்சிஸ்ட் கட்சியினர் முயற்சி செய்வதாகவும், அதிமுக மீது அதிருப்தியில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.

திமுக இழுக்க முயற்சி
இதற்கிடையே டெல்லியில் மார்க்சிஸ்ட் மூத்த தலைவர்களை தி.மு.க. சார்பில் டி.ஆர்.பாலு சந்தித்து பேசி, தங்கள் பக்கம் இழுக்க முயற்சி செய்ததாக கூறப்பட்டது.

அதிமுக உடன் கூட்டணி
இத்தகைய யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், நாடாளுமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.க. கூட்டணியில் நீடிப்போம் என்று இடது சாரி கட்சி தலைவர்கள் அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளனர். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் கூறியதாவது:

அந்நிய நேரடி முதலீடு
மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க. இடம் பெற்றிருந்தது. சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு உள்பட பல மக்கள் விரோத கொள்கைகளில் காங்கிரசுக்கு தி.மு.க. பக்க பலமாக இருந்தது.

திமுக கூட்டணி இல்லை
காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி ஆட்சி ஊழல்கள் மலிந்த ஆட்சியாக இருந்தது. அவர்களுடன் நாங்கள் எப்படி சேருவோம்?.தி.மு.க.வுடன் நாங்கள் ஒரு போதும் கூட்டணி அமைக்க மாட்டோம். நாங்கள் அ.தி.மு.க. கூட்டணியில் தொடர்ந்து நீடிக்கிறோம் என்றார் ஜி. ராமகிருஷ்ணன்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications