ஆர்.கே. நகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக ஆர்.லோகநாதன் போட்டி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது. வேட்பாளராக ஆர். லோகநாதனின் பெயரை அக்கட்சி அறிவித்துள்ளது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜி. ராமகிருஷ்ணன் இதனை அறிவித்தார்.

மக்கள் நலக்கூட்டணியில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனியாக பிரிந்து ஆர்.கே.நகரில் போட்டியிடுகிறது. இதனால் மக்கள் நலக்கூட்டணியில் இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விலகியுள்ளன.

CPI(M)names candidate for RK Nagar bypoll

இன்று சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளரை ஜி.ராமகிருஷ்ணன் அறிவித்தார். ஆர். லோகநாதன் போட்டியிடுவதாக அறிவித்த அவர், மக்கள் நலக்கூட்டணியில் இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தங்களுக்கு ஆதரவு தருவார்கள் என்று நம்புவதாக தெரிவித்தார். ஊடகங்கள் மூலம் அவர்களுக்கு கோரிக்கை வைப்பதாகவும் ஜி. ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The CPIM today announced R.Loganathan as its candidate for the April 12 bypoll for the RK Nagar constituency.
Please Wait while comments are loading...