இடைத்தேர்தல் ரத்தானதால் தமிழிசையின் விருப்பம் நிறைவேறியுள்ளது: முத்தரசன் காட்டம்
ஆர்கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்ததன் மூலம் தமிழிசையின் விருப்பம் நிறைவேறியுள்ளதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஆர்கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்ததன் மூலம் தமிழக பாஜக தலைவர் தமிழிசையின் விருப்பம் நிறைவேறியுள்ளதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பாஜக காலூன்றவே ஆர்கே நகர் இடைத்தேர்தலை ரத்து செய்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
ஆர்கே.நகர் தொகுதிக்கு வரும் புதன் கிழமை இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான உச்சக்கட்ட பணிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டிருந்தன. இந்நிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி ரெய்டில் ஆர்கே.நகரில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் சிக்கின.

இதையடுத்து ஆர்கே.நகர் தொகுதியில் நடைபெற இருந்த இடைத்தேர்தலை ரத்த செய்வதாக தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. இதுகுறித்து பல்வேறு அரசியல் கட்சியினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டிருப்பதற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் பாஜக காலூன்றவே ஆர்கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்துள்ளதாக குற்றம்சாட்டினார்.
தேர்தலை ரத்து செய்ததால் தமிழக பாஜக தலைவர் தமிழிசையின் விருப்பம் நிறைவேறியுள்ளது என்றும் முத்தரசன் தெரிவித்துள்ளார். திமுக வெற்றி பெறும் என கருத்துக்கணிப்பு வந்தபிறகு தேர்தலை ரத்து செய்வது சரியல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் மீண்டும் தேர்தல் நடத்தினால் பணம் கொடுக்கப்படாது என்பதற்கு என்ன உத்தரவாதம்? என்றும் முத்தரசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications