ஏற்காடு சட்டசபை இடைத் தேர்தல்: அதிமுகவுக்கு மார்க்சிஸ்ட் ஆதரவு!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் ஏற்காடு தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர் சி.பெருமாள் மரணம் அடைந்ததையொட்டி டிசம்பர் 4ந் தேதி அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
நடைபெறவுள்ள இந்த இடைத்தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என்று அஇஅதிமுகவின் தலைமை கேட்டுள்ளது. மத்திய அரசின் நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கைகளை அஇஅதிமுகவும் உறுதியாக எதிர்த்து வருகிறது.
தேசிய, மாநில அரசியல் சூழ்நிலைகளைக் கணக்கில் கொண்டும் அதிமுகவின் வேண்டுகோளை ஏற்றும் ஏற்காடு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரை ஆதரிப்பது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தீர்மானித்துள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழியர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஏற்காடு சட்டமன்ற இடைத்தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்துடனும் இதர தோழமைக் கட்சிகளுடனும் இணைந்து பணியாற்ற வேண்டுமென்று மாநில செயற்குழுகேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.
-
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications