எங்களுக்கு 15 எம்எல்ஏக்கள் கிடைச்சிருப்பாங்க. ஜி.ராமகிருஷ்ணன் புலம்பல்!
Subscribe to Oneindia Tamil
திருப்பூர்: தேர்தல்களில் விகிதாசார பிரதிநித்துவம் அமலில் இருந்தால் சட்டசபை தேர்தலில் 6% வாக்குகளைப் பெற்ற மக்கள் நலக் கூட்டணிக்கு 15 எம்.எல்.ஏ.க்கள் கிடைத்திருக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் மாநிலச் செயலர் ஜி. ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

திருப்பூரில் நடைபெற்ற இந்தியாவில் தேர்தல் சீர்திருத்தம் என்ற கருத்தரங்கில் ஜி.ராமகிருஷ்ணன் பேசியதாவது:
- லோக்சபா தேர்தலில் பாஜக 31% வாக்குகளை மட்டுமே பெற்று அறுதிப் பெரும்பான்மை இடங்களைப் பெற்றது.
- 69% வாக்குகள் அக்கட்சிக்கு எதிரான வாக்குகளாகும். ஆகையால் பாஜக வெற்றியின் ஜனநாயக உள்ளடக்கத்தை ஏற்க முடியாது.
- 2011 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக பெற்ற வாக்கு 38.4%; கிடைத்தது 150 எம்.எல்.ஏக்கள்.
- திமுக 22.4% வாக்குகளைப் பெற்றது. ஆனால் 23 எம்.எல்.ஏ.க்கள் தான் கிடைத்தனர்.
- அதே நேரத்தில் 7.9% வாக்குகளைப் பெற்ற தேமுதிகவுக்கு 29 எம்.எல்.ஏ.க்கள் கிடைத்தனர்.
- அரசியல் கட்சிகள் பெறக்கூடிய வாக்குகளுக்கும் அவர்களுக்கு கிடைக்கும் எம்.பி., எம்.எல்.ஏ., இடங்களுக்கும் பொருத்தமில்லாமல் இருக்கின்றன.
- 2016 தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி பெற்ற வாக்கு 6%. ஆனால் ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.
- விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறை இருந்தால் மக்கள் நலக் கூட்டணிக்கு 15 எம்.எல்.ஏக்கள் கிடைத்திருப்பர்.
- பல நாடுகளிலும் விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறை நடைமுறையில் உள்ளது.
- இந்தியாவில் தேர்தல் சீர்திருத்தம் செய்ய வேண்டும். ஏற்கனவே இந்திரஜித் குப்தா குழு பரிந்துரை மத்திய அரசிடம் சமர்ப்பித்தும் 17 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.
- சுதர்சன நாச்சியப்பன் குழுவிடமும் தேர்தல் சீர்திருத்தம் குறித்து சில மாதங்களுக்கு முன்பு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.
- விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறை குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ச்சியாக மக்களிடம் பிரச்சாரம் செய்து வருகிறது.
- தேர்தல்களில் வாக்காளர்களுக்குப் பணம் வழங்குவது தடுக்கப்பட வேண்டும்.
- அரசியல் கட்சிகளின் தேர்தல் செலவுகளை அரசே ஏற்பதன் மூலம் பெருவாரியாக வெள்ளமென பணம் செலவிடுவதை தடுக்க முடியும்.
- தலைமைத் தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்கள் உள்ளிட்ட அரசமைப்புப் பதவி வகிப்போர், உயர் பதவி வகிக்கும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பணி நிறைவுக்குப் பிறகு அரசியலுக்கு வரக்கூடாது.
- தேர்தல் தொடர்பான வழக்குகள், ஒருவரின் பதவிக்காலம் முடிந்த பிறகும், விசாரணை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
- சிவகங்கை தொகுதியில் 2009 ஆம் ஆண்டு ப.சிதம்பரம் பெற்ற வெற்றி குறித்த வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஆனால் அவர் அந்த 5 ஆண்டுகாலப் பதவியை முடித்து, தற்போது ராஜ்யசபா எம்.பி.யாகவும் வந்துவிட்டார்.
- ஆகையால் தேர்தல் தொடர்பான வழக்குகளை விரைந்து விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications