தண்டவாளத்தில் விரிசல்! பெரும் விபத்தில் இருந்து தப்பியது வைகை எக்ஸ்பிரஸ்!!
மணப்பாறை: ரயில்வே தண்டவாளத்தில் விரிசல் இருப்பது குறித்து முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டுவிட்டதால் பெரும் விபத்தில் இருந்து வைகை எக்ஸ்பிரஸ் ரயில் இன்று தப்பியது.
மதுரையில் இருந்து வைகை எக்ஸ்பிரஸ் ரயில் தினமும் காலை 6.45 மணிக்கு புறப்பட்டு திருச்சி வழியாக சென்னை செல்கிறது. இன்று காலை மதுரையில் இருந்து புறப்பட்டு சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது.

தண்டவாளத்தில் விரிசல்
மணப்பாறையை ரயில் நெருங்கி வந்த போது தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டு இருந்ததை பராமரிப்பு ஊழியர்கள் கண்டுபிடித்தனர். அவர்கள் இதுபற்றி உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

வைகை எக்ஸ்பிரஸ் டிரைவருக்கு தகவல்
உடனே வைகை எக்ஸ் பிரஸ் டிரைவருக்கு தகவல் தெரிவித்து ரயிலை நிறுத்துமாறு கூறினர்.

விரிசல் ஏற்பட்ட இடம் அருகே..
ஆனால் வைகை எக்ஸ்பிரஸோ தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்ட இடத்தின் அருகே வந்து விட்டது. இதையடுத்து டிரைவர் உடனே பிரேக் போட்டு ரயிலை நிறுத்தினார். தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்ட பகுதியில் ஏறியபடி நின்றது.

பெரும் விபத்து தவிர்ப்பு
தண்டவாள விரிசல் குறித்து ஊழியர்கள் சரியான நேரத்தில் தெரிவித்து ரயில் நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. 30 நிமிட நேர தாமதத்துக்குப் பின் ரயில் புறப்பட்டுச் சென்றது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications