தமிழகத்துக்கு விரைவில் சட்டசபை தேர்தல்.. இளைஞர்களுக்கு அழைப்பு.. அஸ்வின் ஆவேசம்!
சென்னை: தமிழகத்துக்கு விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் வீரர் அஸ்வின் சூசகமாக தனது ட்விட்டில் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா முதல்வராக உள்ள சூழ்நிலையில், அவருக்கு எதிராக தமிழகம் முழுக்க ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் நடுவே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இது பல தளங்களிலும் உள்ள பிரபலங்களையும் கூட சீண்டியுள்ளது. அதில் ஒரு எதிர்ப்பு யாரும் எதிர்பார்க்காத தளத்தில் இருந்து கூட வந்துள்ளது.

அஸ்வின் கோபம்
அந்த பிரபலம் வேறு யாருமல்ல, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின். சென்னையை சேர்ந்த இவர் சசிகலாவுக்கு எதிரான எதிர்ப்பை டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

வேலைவாய்ப்புகள்
'தமிழகத்திலுள்ள அனைத்து இளைஞர்களுக்கும், 234 வேலைவாய்ப்புகள் விரைவில் கிடைக்க உள்ளது' என்று அஸ்வின் டிவிட் செய்துள்ளார். 234 தொகுதிகள் தமிழகத்தில் இருப்பதையும், விரைவில் ஆட்சி கலைந்து தேர்தல் நடைபெறும், என்பதையும் அஸ்வின் பூடகமாக குறிப்பிட்டுள்ளார்.

இளைஞர்களுக்கு அழைப்பு
மேலும், 234 இடங்களிலும் இளைஞர்கள் போட்டியிட முன்வர வேண்டும் என்ற தனது ஆசையையும் பூடகமாக குறிப்பிட்டுள்ளார் அஸ்வின். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இளைஞர்கள் எழுச்சியுடன் போராடிய நிலையில் அஸ்வின் இளைஞர்களுக்கு அழைப்புவிடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கமலும் கடுப்பு
இதனிடையே நடிகர் கமல், பீலிப்பேய் சாகாடும் அச்சு இறும் அப்பண்டஞ் சால மிகுத்து பெயின்.. என்னும் திருக்குறளை டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். இது சசிகலாவை பற்றி மறைமுகமாக கமல்சாடுவதை போல உள்ளதாக நெட்டிசன்கள் பேசிக்கொள்வது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications