மு.க.வுக்கு காக்கா குணம்: இல.கணேசன் கமெண்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக தலைவர் மு. கருணாநிதிக்கு காக்காவின் குணம் உள்ளது என்று பாஜக மூத்த தலைவரும் தென் சென்னைத் தொகுதியின் திமுக வேட்பாளருமான இல. கணேசன் வர்ணித்துள்ளார்.

பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, வதோதரா தொகுதியில் போட்டியிட வியாழக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தார். அதில் தான் திருமணமானவர் என்ற தகவலை அவர் தெரிவித்திருந்தார்.

மோடியின் இந்த அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்த திமுக தலைவர் கருணாநிதி, தனக்கு நடந்த திருமணத்தையே மறைத்தவர் நாட்டை எப்படி வழிநடத்துவார்? என விமர்சனம் செய்தார்.

Crow and Karunanidhi are same : L. Ganesan

இதற்கு தென் சென்னை தொகுதி பாஜக வேட்பாளர் இல.கணேசன் தமது தேர்தல் பிரசார கூட்டத்தில் பதில் அளித்துள்ளார்.

நல்லது தெரியாது

மஞ்சள், குங்குமம் மற்றும் மாலையுடன் காட்சியளிக்கும் பசு மாட்டை பார்த்தால் அதை தொட்டு கும்பிட வேண்டும் என்ற எண்ணம் தான் எல்லோருக்கும் ஏற்படும். ஆனால், அதன் முதுகில் சிறிய காயம் இருந்தால் அது மட்டும் தான் காகத்தின் கண்ணில் படும்.

காக்கா குணம்

அதைப் போல, மோடியின் மகத்தான சாதனைகளை ஏற்க மறுக்கும் கருணாநிதி, மோடியின் புகழுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் இப்படி பேசியுள்ளார். இந்த விஷயத்தில் காக்காவும், மு.க.வும்(மு.கருணாநிதி) ஒன்று என்று கூறினார் இல.கணேசன்.

நாட்டை காப்பாற்றுங்கள்

இந்த தேர்தல் , ஊழலில் இருந்து இந்த நாட்டை காப்பாற்றுவதற்கும், கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வரும் காங்கிரஸ் ஆட்சியில் இருந்து நாட்டை காப்பாற்றுவதற்காகவும், நரேந்திர மோடியை பிரதமர் ஆக்குவதற்கும் நடைபெறும் தேர்தல்.வாக்குறுதிகளை தந்து நாங்கள் தேர்தலை சந்திக்கவில்லை.

வல்லரசாக வேண்டும்

உலகில் இந்தியா ஒரு வல்லரசாக வேண்டும் என்பதற்காகவும், அடுத்த தலைமுறைக்கு நமது வளர்ச்சி பணிகளை எடுத்து செல்வதற்காக மோடி தலைமையிலான ஆட்சி அமைய கோரி வருகிறோம்.மோடியின் பிரதிநிதியான நான் தென்சென்னை தொகுதியில் போட்டியிடுகிறேன்.

உரிமைக்கு குரல் கொடுப்பேன்

தென்சென்னை பகுதி மீனவர்கள் நிறைந்த பகுதியாக இருப்பதால் அவர்களின் உரிமையை காப்பாற்றுவதற்கு நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன் என்றும் இல.கணேசன் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+