ரஜினிகாந்த் கோரிக்கை நிராகரிப்பு... சிஎஸ்கே வீரர்கள் கறுப்பு பட்டை அணியவில்லை
ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரில், இரண்டாண்டுகளுக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடுகிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் சிஎஸ்கே முதலில் பவுலிங் செய்கிறது. கா
சென்னை: ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரில், இரண்டாண்டுகளுக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடுகிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் சிஎஸ்கே முதலில் பவுலிங் செய்கிறது. காவிரி பிரச்னைக்கு கண்டனம் தெரிவித்து, சிஎஸ்கே வீரர்கள் கறுப்பு பட்டை அணிய வேண்டும் என்ற நடிகர் ரஜினிகாந்த் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
காவிர் மேலாண்மை வாரியம் கோரி, பல்வேறு அரசியல் கட்சிகள், தமிழ் அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் ஐபிஎல் போட்டி நடத்துவதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். போட்டியை நடத்தினால் போராட்டம் நடத்துவோம் என்று எச்சரித்தனர். அதன்படி, சேப்பாக்கம் மைதானத்தை சுற்றியுள்ள பகுதிகளிலும், அண்ணா சாலையிலும் பல்வேறு அமைப்புகள், கட்சிகள் போராட்டங்களை நடத்தின.

பல மணி நேரம் நடந்த இந்த போராட்டங்களால் அண்ணா சாலை போர்க்களம் போல் காட்சி அளித்தது. அந்தப் பகுதிகளில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இந்த நிலையில் பல்லாயிரக்கணக்கான போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்துளனர். பல இடங்களில் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்தனர்.
பல களேபரங்களுக்கு இடையே சிஎஸ்கே மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி துவங்கியுள்ளது. டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் பவுலிங் தேர்ந்தெடுத்துள்ளார். பல கட்சிகள், அமைப்புகள் போராட்டம் நடத்துவோம் என்று அறிவித்த நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததற்கு கண்டனம் தெரிவித்து, சிஎஸ்கே வீரர்கள் கறுப்பு பட்டை அணிய வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியிருந்தார். ஆனால், வீரர்கள் கறுப்பு பட்டை ஏதும் அணியவில்லை
-
வாள் தூக்கி நின்ற வெங்கடேஷ் ஐயர்.. ப்ளே ஆஃப் வந்தாலே ஆளை கையில் பிடிக்க முடியாது.. இம்பேக்ட் ஆட்டம்! -
நீதான்யா ஸ்பின்னர்.. எகனாமியை பாருங்கப்பா.. ஆர்சிபி வெற்றிக்கு காரணமே க்ருணால் பாண்டியா தான்! -
சோலி முடிஞ்சுது.. சொதப்பிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்.. இனி குஜராத் கதி அவ்வளவு தான்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!











Click it and Unblock the Notifications