பாஜக தொண்டர் ஜடேஜா.. அடப்பாவமே.. இந்த யோசனை லிஸ்ட்லயே இல்லையே.. அண்ணாமலை சொன்ன வார்த்தை
சென்னை: குஜராத் அணியை வீழ்த்தி 5வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது தோனி தலைமையிலான சென்னை அணி. இந்த நிலையில் பாஜக தொண்டர் ரவீந்திர ஜடேஜாவால் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றுள்ளது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.
16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. சி.எஸ்.கே அணி 5-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியிருக்கிறது. சென்னை அணியின் வெற்றியை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சமூக வலைத்தளங்களிலும் சி.எஸ்கே குறித்த பதிவுகளே நிரம்பியிருக்கின்றன.

தோனியின் கேப்டன்ஷிப் திறமை குறித்தும் ஒருபக்கம் ரசிகர்கள் மெய்சிலிர்க்க கூறி வரும் நிலையில் இறுதிப்போட்டியில் சென்னை அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த ஆல்ரவுண்டர் ஜடேஜாவுக்கும் பாராட்டு மழை பொழிந்து வருகிறார்கள். ஜடேஜா இறுதிப் போட்டியில் பந்து வீச்சில் மட்டும் இன்றி பேட்டிங்கிலும் கலக்கினார். குஜராத் அணியின் முக்கிய வீரரான சுப்மான் கில் விக்கெட்டை வீழ்த்தியதோடு, கடைசி இரண்டு பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் போட்டியை வெற்றிகரமாக முடித்து தோனியின் பட்டாளத்திற்கு வெற்றியை ஜடேஜா தேடிக் கொடுத்தார்.
ஐபிஎல் போட்டியில் சென்னை அணி குஜராத் அணியை வீழ்த்தியதை அரசியல் விவாதத்திற்கும் பொருள்படுத்தி சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் விவாதித்து வருகின்றனர். கடந்த பிளே ஆஃப் போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் குஜாரத் டைடன்ஸ் அணி வந்து விளையாடிய போது தோல்வி கண்டது. அப்போது சென்னைக்கு வந்து குஜராத்தால் கால் பதிக்க முடியாது என அரசியல் கலந்து பலரும் இந்த வெற்றியை பற்றி கருத்து சொன்னார்கள்.
இந்த நிலையில், சென்னை அணி மீண்டும் குஜராத் அணியை வீழ்த்தியது பற்றி இவ்வாறான கருத்துக்கள் நெட்டிசன்களால் தெறிக்க விடப்படுகின்றன. இந்த சூழலில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு படி மேலாக சென்று, சென்னை அணிக்கு வெற்றி தேடி தந்ததே ஒரு பாஜக தொண்டர்தான் என்று கூறியிருக்கிறார். இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வெற்றிக்கான ரன்னை அடித்தவர் ஒரு பாஜக தொண்டர். ஜடேஜாவின் மனைவி பாஜக எம்.எல்.ஏ, ஜடேஜா குஜராத்தை சேர்ந்தவர். தமிழனாக பெருமை படுகிறேன். ஆனால் சிஎஸ்கே அணியை விட குஜராத் டைட்டன்ஸ் அணியில் தமிழர்கள் அதிகம் இருந்தார்கள் அதையும் கொண்டாடனும். 96 ரன்கள் அடித்தவர் ஒரு தமிழர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஒரு தமிழர் கூட ஆடவில்லை. ஆனாலும் நாம் கொண்டாடுகிறோம். காரணம் தோனி. சி.எஸ்.கே அணிக்கு வெற்றியை தேடிக் கொடுத்தது பாஜக தொண்டர் என்பதில் பெருமைப்படுகிறோம். அதேதான் 2024 ல் தமிழகத்தில் நடக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
-
பிரபலங்களால் பாஜகவுக்கு ப்ராப்ளம்.. தவெகவுக்கு தாவும் 2 நடிகைகள்! பக்கா பிளான் போட்ட செங்கோட்டையன்! -
திருட்டு நடக்கிறது என்பதால் மால்களை மூடிவிடலாமா? மத்திய அரசுக்கு நக்கலாக கேள்வி எழுப்பிய டெலிகிராம் -
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
Waiting Is Over.. பாஜகவுக்கு டாடா சொன்ன அண்ணாமலை! புதிய கட்சி எப்போது உதயம்? லீக்கான தகவல்! -
விஜய்யின் அடிமடியில் கைவைக்கும் அண்ணாமலை.. தலித் அல்லாத வாக்குகளுக்கு குறி.. புதிய ரூட் எடுக்கிறார்? -
ரஜினிகாந்த் உடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் மீட்டிங்.. போயஸ் கார்டனில் ஆலோசித்தது என்ன? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு












Click it and Unblock the Notifications