வழக்கறிஞர்கள், விவசாயி, பொறியாளர்... கடலூர் மாவட்ட திமுக வேட்பாளர்கள் பயோடேட்டா
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் மூத்த திமுக தலைவரான எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் குறிஞ்சிப்பாடியில் நிற்கிறார். இந்த மாவட்டத்தில் பெரும்பாலும் வன்னிய சமுதாயத்தினரை அதிக அளவில் களம் இறக்கியுள்ளது திமுக.
கடலூர் மாவட்ட திமுக வேட்பாளர்கள் வாழ்க்கைக் குறிப்பு:
எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம்
குறிஞ்சிப்பாடி தொகுதியில் முன்னாள் அமைச்சர்
எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் போட்டியிடுகிறார். வன்னியரான இவர் பிஎல் முடித்தவர். சொந்த ஊர் காட்டுமன்னார்கோவில் தொகுதிக்குட்பட்ட முட்டம் கிராமம் ஆகும். உயர் நிலை செயற்குழுவில் உறுப்பினராக உள்ள எம்.ஆர்.கே. கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளராகவும் இருக்கிறார்.
கே.ஆர்.செந்தில்குமார்
சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும்
செந்தில்குமார், அரசியல் அறிவியல் படித்தவர். சொந்த ஊர் சிதம்பரம்தான். விவசாயத்தை தொழிலாக கொண்டவர். 42 வயதான இவரும் வன்னியர்தான். திமுக நகர செயலாளராக இருந்து வருகிறார்.
பாவாடை கோவிந்தசாமி
விருத்தாச்சலம் தொகுதியில் முன்பு தங்க ஆனந்தன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். பின்னர் அவர் மாற்றப்பட்டு பாவாடை கோவிந்தசாமி வேட்பாளராகியுள்ளார். இவர் கடலூர் மேற்கு மாவட்ட பொருளாளாராக இருக்கிறார்.
சி.வெ. கணேசன்
திட்டக்குடி தனி தொகுதியில் போட்டியிடும் இவர் கழுதூரைச் சேர்ந்தவர், வழக்கறிஞர்.கல்வி நிறுவனம் நடத்தி வருகிறார். கடலூர் மேற்கு மாவட்டச் செயலர், மங்களூர் ஒன்றியச் செயலராக இருக்கிறார்.
சபா. ராசேந்திரன்
நெய்வேலி தொகுதியில் போட்டியிடுபவர் சபா.
ராசேந்திரன். 54 வயதாகும் இவர் பொறியியல் படிப்பு படித்தவர். சொரத்தூரைச் சேர்ந்தவர். வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த இவர், பண்ருட்டி ஒன்றிய திமுக செயலாளராக இருக்கிறார். இவரது தந்தை சபாபதி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தவர்.
இள. புகழேந்தி
கடலூர் தொகுதியில் போட்டியிடுகிறார் மூத்த தலைவர்களில் ஒருவரான இள
புகழேந்தி. 61 வயதான இவர் நாடார் சமுதாயத்தைச் சேர்ந்தவர். சொந்த ஊர் புதுப்பாளையம், கடலூர். வழக்கறிஞரான புகழேந்தி, மாநில மாணவரணிச் செயலாளராக இருக்கிறார்.
துரை. கி.சரவணன்
புவனகிரி தொகுதியில் போட்டியிடுகிறார் துரை கி.
சரவணன். 50 வயதான இவர் தொழிலதிபர் ஆவார். வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். கட்சியில் மாநில திமுக பொறியாளர் அணி செயலாளராக இருக்கிறார்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications