நான் குளித்ததை ஆளுநர் பார்த்தாரா?. . என்ன சொல்கிறார் பாதிக்கப்பட்ட பெண்??

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தங்கள் வீட்டில் வந்து கழிவறையை மட்டுமே பார்த்துவிட்டு சென்றதாகவும் தான் குளிப்பதை பார்த்ததாக ஊடகங்களில் தவறான தகவல் பரவுவதாகவும் சம்பந்தப்பட்ட பெண் கூறியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

கடலூர் : தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தங்கள் வீட்டில் வந்து கழிவறையை பார்வையிட்டு சென்ற போது யாரும் குளிக்கவில்லை என்றும் ஊடகங்களில் தவறான தகவல் பரவுவதாகவும் சம்பந்தப்பட்ட பெண் கவுரி மறுப்பு தெரிவித்துள்ளார். தானே நேரில் ஆளுநரை சந்தித்து மனு அளித்ததாகவும் ஆளுநர் குளித்ததை பார்த்ததாக சொல்வதில் எந்த உண்மையும் இல்லை என்றும் அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் நேற்று ஆய்வுக்கு சென்ற தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கழிவறை ஒன்றை பார்ப்பதற்காக சென்றார். அவர் திடீரென ஒரு வீட்டில் நுழைந்ததாகவும், அங்கு ஒரு பெண் குளித்துக் கொண்டிருந்ததாகவும், அதிகாரிகளை பார்த்து அந்தப் பெண் அலறியதாக செய்திகள் வெளியாகின.

Cuddalore lady Gowri explains that a fake news is roaming in media that governor visited her bathroom while she took bath

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து கவுரி என்ற பெண் விளக்கம் அளிக்கும் வீடியோ வாட்ஸ் அப்பில் வலம் வருகிறது. அதில் பேசும் பெண்: ஆளுநர் எங்கள் வீட்டிற்குத் தான் வந்து ஆய்வு செய்தார். வீட்டில் நானும் என்னுடைய சகோதரியும் இருந்தோம். அவர் 10 நிமிடம் வந்து கழிவறையை பார்வையிட்டுவிட்டு சென்றுவிட்டார்.

அந்த சமயத்தில் யாரும் அங்கு குளிக்கவில்லை, நான் குளித்ததாக செய்திகள் வெளிவந்துள்ளன. இது குறித்து போலீசாரிடம் புகார் அளிக்க உள்ளேன். என்னுடைய இந்த மறுப்பு செய்தியை தயவு செய்ய வேண்டும். இது போன்ற தவறான தகவல்களால் எதிர்காலத்தில் அதிகாரிகள் யாரும் ஆய்வுக்கே வரமாட்டார்கள்.

இப்படியான செய்தியால் வெளியில் தலைகாட்ட முடியாமல் நான் வீட்டிலேயே இருக்கிறேன். நான் குளித்துக்கொண்டிருந்தேன் என்று சொல்கிறார்களே நான் அவரிடம் மனு கொடுக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. அப்படி நான் குளித்துக் கொண்டிருந்தால் நான் குளித்துவிட்டு வரும் வரையா ஆளுநர் காத்திருந்து மனு வாங்கிவிட்டு போவார் என்று கவுரி தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+