தொடரும் பணிச்சுமை.. பெண் போலீஸ் விஷம் குடித்து தற்கொலை முயற்சி.. கடலூரில் பரபரப்பு
பணிச்சுமை காரணமாக பெண்போலீஸ் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
Recommended Video

கடலூர்: கடலூரில் இரவு பணியை முடித்து விட்டு வீட்டுக்கு வந்த பெண் போலீஸ் திடீரென விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூரில் ஆயுதப்படை போலீசாக பணியாற்றி வருபவர் சத்தியசீலன். இவரது மனைவி 27 வயதான கவிதா. இவரும் ஆயுதப்படை போலீஸாகத்தான் பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவருமே கடலூர் போலீஸ் குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், இரவு பணியினை முடித்து கவிதா இன்று காலை வீட்டுக்கு வந்தார். வீட்டில் யாரும் இல்லை என கூறப்படுகிறது. அப்போது கவிதா திடீரென விஷம் குடித்ததாக தெரிகிறது.
நீண்ட நேரம் கவிதா வெளியில் வராமலும் யாருடனும் பேசாமலும் இருந்ததை அறிந்த அக்கம்பக்கத்தினர் சந்தேகம் அடைந்து வீட்டினுள் சென்று பார்த்தனர். அப்போது கவிதா மயங்கிய நிலையில் விழுந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியிந்தனர். இதையடுத்து அவரை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு அவர்கள் அனுப்பி வைத்தனர். அங்கு கவிதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கவிதாவின் தற்கொலை முயற்சிக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. என்றாலும் வேலைபளு காரணமாக அவர் மன உளைச்சலில் இருந்ததாகவும், அதனால் தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கலாம் என்றும் உறவினர்களும், அக்கம் பக்கத்தினரும் தெரிவித்தனர். எனினும் பெண் போலீஸ் கவிதாவின் தற்கொலை முயற்சி குறித்து புதுநகர் போலீசார் விரைந்து வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications