சென்னை மட்டும்தான் தமிழகமா? சமூக வலைத்தளங்களில் குமுறும் கடலூர்வாசிகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடலூர் மாவட்டத்தில் விடாமல் கொட்டி வரும் கனமழையால் வெள்ளப்பாதிப்பு இன்னமும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. லட்சக்கணக்கான வீடுகள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. ஆயிரக் கணக்கான ஏக்கர் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகிக் கொண்டு இருக்கிறன.

கடலூர் ஈத்தனூர் பகுதியில் வெள்ளத்தில் சிக்கி 300 குடும்பங்கள் தவித்து வருகின்றனர் அவர்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை. சென்னை பாதிப்பு கடலூர் மாவட்ட வெள்ள சேதத்தை மூழ்கடித்து விட்டது என்று சமூக வலைத்தளங்களில் குற்றம்சாட்டியுள்ளனர். எனவேதான் சென்னையை பார்வையிட்ட பிரதமர் கடலூர் மாவட்ட வெள்ளச் சேதத்தை பார்வையிடவில்லை.

சென்னைதான் தமிழகமா?, சென்னை மக்கள்தான் தமிழக மக்களா? ஏன் இந்த ஓரவஞ்சனை? என கடலூர் மாவட்ட சமூக ஆர்வலர்கள் முகநூலில் தங்கள் பதிவுகளை செய்த வண்ணம் உள்ளனர்.

கடலூரை கவனிங்க ப்ளீஸ்

சென்னையில் வெள்ள பாதிப்பு போல கடலூர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நிவாரணப்பணிகளை கடலூர் பக்கமும் கொஞ்சம் திருப்புங்க என்று கூறியுள்ளார் நடிகர் தனுஷ்.

தங்குமிடம் இலவசம்

கடலூரில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு தங்க இடமின்றி தவிப்பவர்களுக்கு சுவாதி லாட்ஜ் இலவசமாக இடமளிப்பதாக அறிவித்துள்ளது.

உணவின்றி தவிப்பு

கடலூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்து திருமண மண்டபங்களில் தஞ்சமடைந்துள்ள பலரும் உணவின்றி தவித்து வருவதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர்.

கடலூருக்கு உதவி தேவை

கடலூர் வெள்ளத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் இறந்துவிட்டனர். தொடர்ந்து கனமழை கொட்டிவருகிறது. எனவே கடலூர் மக்களுக்கு உடனடியாக உதவி தேவை என்று ஏராளமானோர் கேட்டுள்ளனர்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+