குடும்பத் தகராறு... கத்தியால் மாறி மாறி குத்திக் கொண்ட தந்தை - மகன்: மருத்துவமனையில் அனுமதி
கம்பம்: கம்பத்தில் குடும்பத்தகராறில் ஒருவரையொருவர் மாறி, மாறி கத்தியால் குத்திக் கொண்ட தந்தை மற்றும் மகன் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப் பட்டுள்ளனர்.
தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த விவசாயி கந்தசாமி(50) விவசாயி. இவர் நேற்று தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆத்திரத்தில் தனது மனைவியை அவர் அடித்துள்ளார்.
தந்தை தனது தாயை அடிப்பதைக் கண்டு கோபமடைந்துள்ளார் அவர்களது மகன் சிவகுருநாதன். தாயை அடிக்க வேண்டாம் என அவர் தனது தந்தையைக் கண்டித்துள்ளார்.
இதனால் தந்தை, மகன் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கந்தசாமி மகன் என்றும் பாராமல் சிவகுருநாதனைக் கத்தியால் குத்தியுள்ளார். பதிலுக்கு தானும் தந்தை கந்தசாமியை கத்தியால் குத்தியுள்ளார் சிவகுருநாதன்.
இந்த தாக்குதலில் படுகாயமடைந்த இருவரையும் அக்கம்பக்கத்தார் மீட்டு சிகிச்சைக்காக அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.
தகவலறிந்து மருத்துவமனைக்கு விரைந்து வந்த போலீசார், இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடும்பத் தகராறில் தந்தையும், மகனும் மாறி, மாறி கத்தியால் குத்திக் கொண்ட சம்பவம் கம்பம் பகுதியில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications