கம்பம் ராமகிருஷ்ணன் Vs ஜெயக்குமார்! தேனி தெற்கு மாவட்ட திமுக பனிப்போர்! சென்னையிலிருந்து சென்ற டீம்!
தேனி: தேனி தெற்கு மாவட்ட திமுக செயலாளராக உள்ள கம்பம் ராமகிருஷ்ணன் குறித்து தலைமையிடம் குவிந்த புகார்களை தொடர்ந்து சென்னையிலிருந்து சென்ற ஒரு டீம் விசாரணை முடித்துவிட்டு திரும்பியிருக்கிறது.
நெல்லை மத்திய மாவட்ட திமுக செயலாளர் அப்துல் வஹாப் மாற்றத்தை தொடர்ந்து மேலும் சில மாவட்டச் செயலாளர்கள் திமுகவில் மாற்றப்படலாம் என கூறப்படும் நிலையில், அதில் கம்பம் ராமகிருஷ்ணன் உட்பட இன்னும் ஒரு சிலரது பெயர் அடிபடுகிறது.

1994ஆம் ஆண்டு மதிமுகவுக்கு சென்ற கம்பம் ராமகிருஷ்ணன் கடந்த 2011ஆம் ஆண்டு தான் திமுகவுக்கு திரும்பினார். இந்நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் தேனி மாவட்ட திமுக பொறுப்பாளராக இருக்கும் அவர், தங்க தமிழ்செல்வன் வருகைக்கு பிறகு தேனி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக மட்டும் இருந்து வந்தார்.
இதனிடையே அண்மையில் நடைபெற்ற திமுக மாவட்டச் செயலாளர்கள் தேர்தலில் கம்பம் ராமகிருஷ்ணனை எதிர்த்து போட்டியிட விருப்பமனு கொடுத்தவர் ஜெயக்குமார். இவர் கருணாநிதி காலத்திலேயே தேனி மாவட்ட திமுக பொறுப்பாளராக இருந்தவர். ஒன்றியச் செயலாளர் பதவியிலிருந்து படிப்படியாக கட்சியில் வளர்ச்சி அடைந்தவர்.

திமுக மாவட்டச் செயலாளர் தேர்தலின் போதே கம்பம் ராமகிருஷ்ணனுக்கு எதிராக கச்சைக்கட்டி நின்ற ஜெயக்குமாரை, அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் அழைத்துப் பேசி விருப்பமனுவை திரும்பபெறுமாறு கூறியதால் அப்போது சைலண்ட் ஆனார் ஜெயக்குமார்.
இந்நிலையில் இப்போது கம்பம் ராமகிருஷ்ணன் ஒரு வேளை மாற்றப்பட்டால் தேனி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பதவி ஜெயக்குமார் வசமாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
-
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார்












Click it and Unblock the Notifications