ஓகி புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது: மத்திய அமைச்சர் அல்போன்ஸ்
ஓகி புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என்று மத்திய அமைச்சர் அல்போன்ஸ் கண்ணன்தானம் தெரிவித்தார்.
திருவனந்தபுரம்: ஓகி புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என்று மத்திய அமைச்சர் அல்போன்ஸ் கண்ணன்தானம் தெரிவித்துள்ளார். அதேவேளையில், நிலைமையை சரி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஓகி புயலால் தமிழகம் மற்றும் கேரளா கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. இந்நிலையில் ஓகி புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று கேரள மாநில அரசு கோரிக்கை விடுத்தது.

திருவனந்தபுரத்தில் தலைமை செயலகத்தில் முதல்வர் பினராயி விஜயனுடன் மத்திய அமைச்சர் அல்போன்ஸ் இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறுகையில் மாநில அரசுக்கு தேவையான அனைத்து நிவாரணங்களையும் மத்திய அரசு வழங்கிவிட்டது.
இந்நிலையில் புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று மாநில அரசிடம் இருந்து கோரிக்கை எழுந்துள்ளது. எனினும் அது அறிவிக்க மத்திய அரசுக்கு எந்தவித திட்டமும் இல்லை. புயல் பாதிப்பு குறித்த எச்சரிக்கை நவம்பர் 30-ஆம் தேதி அன்றுதான் கிடைத்தது. முன்கூட்டி எந்த அறிவிப்பும் இல்லை என்றார் அல்போன்ஸ்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications