மாயமான மீனவர்கள் பற்றி புகார் கொடுங்க - குமரி மாவட்ட எஸ்பி வேண்டுகோள்

ஓகி புயலில் சிக்கி மாயமான மீனவர்களைப் பற்றி குளச்சல் கடலோர காவல்நிலையத்தில் புகார் அளிக்கலாம் என கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: ஓகி புயல் கடந்த மாதம் 30ஆம் தேதி தாக்கியதில் பெரும் பொருட்சேதம் ஏற்பட்டது. மாயமான மீனவர்களைப் பற்றி குளச்சல் கடலோர காவல்நிலையத்தில் புகார் அளிக்கலாம் என கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து மீனவ கிராம மக்களுக்கு அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஓகி புயல் காரணமாக பெரும் பொருட் சேதம், உயிர்சேதம் ஏற்பட்டது. கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த பல மீனவர்கள் மாயமாயினர். பலர் உயிரிழந்துள்ளனர்.

ராமன்துறையைச் சேர்ந்த ஜெரின்யாஸ் என்பவர் இறந்தது தொடர்பாக குளச்சல் கடலோர காவல்நிலையத்தில் குற்றவழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதே போல ராமன்துறையைச் சேர்ந்த சூசையா என்பவர் இறந்தது தொடர்பாக கேரளா மாநிலம் நீண்டகரை காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல காணமல் போன பல மீனவர்கள் குறித்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இந்திய கடலோர காவல்படை மூலம் தேடும்பணி நடைபெறுகிறது.

இதேபோல மாயமான மீனவர்களைப் பற்றி உறவுகள், ரத்த சொந்தகங்கள், குளச்சல் கடலோர காவல்நிலையத்தில் புகார் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளபடுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+