வர்தா புயல் பாதிப்பு- சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் ரயில்கள் நேரம் மாற்றம்
வர்தா புயல் பாதிப்பில் இருந்து சென்னை மாநகரம் இன்னமும் மீளவில்லை. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையில் இருந்து புறப்படும் சில ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
சென்னை: சென்னையில் வர்தா புயல் ஆடிய கோரத்தாண்டவத்திற்கு ரயில் நிலையங்களும் தப்பவில்லை. மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டதால் பல்வேறு ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. பயணிகளுக்கு ஐ.ஆர்.சி.டி.சி சார்பில் உணவு வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டன. பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.
புயல் காரணமாக ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கு டிக்கெட் கட்டணம் திரும்ப அளிக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது. இந்த தொகை பயணம் தொடங்கும் தேதியில் இருந்து 3 நாட்களுக்கு திருப்பி தரப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. சென்னை- நியூ ஜல்பைகுறி (22611) காலை 11 மணிக்கு பதில் பிற்பகல் 1 மணிக்கு புறப்படும்; சென்னை - திருவனந்தபுரம் (12623) இரவு 7.45 பதில் நள்ளிரவு 12 மணிக்கு புறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கன்னியாகுமாரி - பெங்களூரு (16525) காலை 10.30 பதில் மாலை 5.45 மணிக்கு புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதனிடையே வர்தா புயல் காரணமாக 2 நாட்கள் நிறுத்தப்பட்ட சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே பறக்கும் ரயில்சேவை இன்று தொடங்கியது. பணிக்கு செல்பவர்கள் பறக்கும் ரயிலில் செல்லத் தொடங்கியுள்ளனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications