புயல் எதிரொலி... சென்னை, காஞ்சி, திருவள்ளூர், கடலூர், புதுவை பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
வர்தா புயல் மிரட்டலைத் தொடர்ந்து காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் நாளை பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: வர்தா புயல் மிரட்டல் காரணமாக, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நாளை ஒரு நாள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல புதுச்சேரி, காரைக்காலிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள அதி தீவிர வர்தா புயல் சென்னைக்கு வெகு அருகே நெருங்க வந்து கொண்டிருக்கிறது. இந்தப் புயலானது நாளை பிற்பகல் வாக்கில் சென்னைக்கு மிக மிக அருகே கரையைக் கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் சென்னையிலேயே இது கரையைக் கடக்கலாம் என்றும் ஒரு கணிப்பு கூறுகிறது.

இதையடுத்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, காஞ்சிபுரம், கடலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை ஒரு நாள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிக்கையை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்கள் பிறப்பித்துள்ளனர்.

இதேபோல புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரத்தில்
விழுப்புரம் மாவட்டத்தில் கடலோரத்தில் உள்ள தாலுகாக்களில் மட்டும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications