மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் போராடுங்கப்பா.. அதிமுகவினருக்கு தா.பா. ஆலோசனை!
திருவாரூர்: ஜெயலலிதாவின் ஆதரவாளர்கள் நடத்தி வரும் போராட்டங்கள், மக்களுக்கும், பொதுச் சொத்துக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் அவர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.
திருவாரூரில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், 18 ஆண்டுகளாக நடைபெற்று வந்த சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா 4 ஆண்டு சிறைத் தண்டனைப் பெற்று பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

நீதிமன்றத் தீர்ப்பைப் பொருத்த வகையில் சரியா, தவறா, நியாயமா என்பதையெல்லாம் ஜெயலலிதா தரப்பில் செய்யப்படும் மேல்முறையீட்டில் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றங்கள் விசாரித்து விளக்கம் தெரிவிக்கும்.
ஜெயலலிதாவின் ஆதரவாளர்கள் நடத்தி வரும் போராட்டங்கள் மக்களுக்கும், பொதுச்சொத்துக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் அவர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும்.
முன்னாள் பிரதமர் தேவகவுடா, பெங்களூர் சிறையில் இருக்கும் ஜெயலலிதாவை பாதுகாப்பு நலன் கருதி அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு அவர் விருப்பம் தெரிவிக்கும் மருத்துவமனைக்கு மாற்றலாம் அல்லது தமிழக சிறைக்கு மாற்றலாம் என்ற கருத்தை தெரிவித்துள்ளார். எனவே, ஜெயலலிதாவின் உடல் நிலையின் காரணமாக அவரை வேறு இடத்துக்கு மாற்ற நீதிமன்றமே கவனித்து ஆணையிட வேண்டும் என்றார் பாண்டியன்.
-
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications