வைகோவுக்கு வைரியாக விருதுநகரில் களமிறங்கும் டி. ராதாகிருஷ்ணன்

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: விருதுநகர் லோக்சபா தொகுதி அதிமுக வேட்பாளராக டி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப் பட்டுள்ளார்.

தற்போது 60 வயதாகும் டி.ராதாகிருஷ்ணனின் சொந்த ஊர் சிவகாசி ஆகும். இவரது தந்தை பெயர் பி.தர்மர்.

தேவர் சமுதாயத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணனின் மனைவி பெயர் ஆர். பாக்கியலட்சுமி. இவருக்கு ஆர்.சீதா, ஆர்.தங்கேஸ்வரி மற்றும் ஆர்.சரண்யா என மூன்று மகள்களும், ஆர்.தர்மராஜா என்ற மகனும் உள்ளனர்.

D Radhakrishnan is the Virudhunagar ADMK candidate

கடந்த 1997ம் ஆண்டு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி அவைத் தலைவராகவும், 2000ல் மாவட்ட அதிமுக செயலராகவும், அக்டோபர் 2001 முதல் ஜூலை 2003 வரை மாவட்ட அதிமுக செயலராகவும், ஜூலை 2003 முதல் 2004 வரை மாவட்ட அதிமுக இணைச் செயலராகவும் பதவி வகித்த ராதாகிருஷ்ணன், தற்போது விருதுநகர் மாவட்ட அதிமுக துணைச் செயலராகவும், 2011 முதல் சிவகாசி ஒன்றியக்குழுத் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார்.

வைகோவுடன் மோதல்

இதே விருதுநகரில் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக பொதுச்செயலர் வைகோ போட்டியிடுவார் என்று கூறப்பட்டு வருகிறது. விருதுநகர் தொகுதியில் இம்முறை எப்படியும் வென்றே தீருவது என்ற கங்கணத்துடன் மதிமுகவினர் உள்ளனர்.

இதனால் வைகோவுக்கு பரமவைரியாக ராதாகிருஷ்ணன் உருவெடுப்பாரா? அல்லது வைகோ வீழ்த்திய ராதாகிருஷ்ணன் என்ற பெருமையை பெறுவாரா? என்பதுதான் கிளைமாக்ஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+