ஜெயலலிதாவை விடுவிக்க கோரி... அடுத்தபடியாக விளையாட்டுத் துறையினர் 'வெளையாட்டு'!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை விடுதலை செய்யக் கோரி, இன்று சென்னையில் தமிழக விளையாட்டுத் துறையினர் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது.

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா தற்போது பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப் பட்டுள்ளார். அவரை விடுதலை செய்யக் கோரி அதிமுகவினருடன் இணைந்து மற்ற துறையினரும் போராடி வருகின்றனர்.

அந்தவகையில், தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளும் தங்களது ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் இந்தக் கையெழுத்து இயக்கத்தை ஏற்பாடு செய்துள்ளனர்.

ஸ்குவாஷ் வீரங்கனை ஜோஷ்னா சின்னப்பா, முன்னாள் ஹாக்கி வீரர் பாஸ்கரன், தடகள வீராங்கனைகள் ஷைனி வில்சன், ஜெயலட்சுமி உள்ளிட்ட பலர் இந்தக் கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்கவுள்ளதாக தமிழ்நாடு ரக்பி கால்பந்து யூனியனும், தமிழ்நாடு கூடைப்பந்து கூட்டமைப்பும் தெரிவித்துள்ளது.

சென்னை நேரு விளையாட்டு அரங்கில் காலை 7.30 மணிக்குத் தொடங்கிய இந்த கையெழுத்து இயக்கம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+