தான் உற்சவ்.. சச்சின், அமிதாப் ஆதரவு.. இல்லாதவருக்கு ஏதாவது செய்ய கைகோருங்கள்!
சென்னை: தான்உற்சவ் என்பது கொடுப்பதை உருவாக்கும் ஒரு நிகழ்ச்சி. அவரவர்கள் தங்களுக்கு விருப்பமானதை கொடுக்கும் நிகழ்ச்சி. நேரத்தையோ, பொருளையோ, பணத்தையோ, திறமையையோ தேவைப்படுவோருக்கு தரலாம்.
2018ம் ஆண்டு தான்உற்சவின் 10வது ஆண்டு விழாவாகும். ஆலியா பட், அமிதாப் பச்சன், அனு அகா, அஜிம் பிரேம்ஜி, நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா, சாவி ராஜ்வத், டாக்டர் தேவி ஷெட்டி, லதா மங்கஷ்கர், மேரி கோம் மற்றும் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்டோர் இதில் இணைகிறார்கள்.

சாமானியர்கள் 10 பேர், தங்கள் வாழ்நாளில் சம்பாதிக்கும் சொத்துக்களில் பாதியை தானமாக வழங்க முன் வருவதாக கூறியுள்ளனர். ஆயிரக்கணக்கான கார்பொரேட்டுகள், என்ஜிஓக்கள், பள்ளிகள், கல்லூரிகள், கம்யூனிட்டிகள், சங்கங்கள் அவ்வளவு ஏன் அரசு துறையினர் கூட இந்த திருவிழாவை கொண்டாட தயாராகி வருகிறார்கள்.
மும்பையிலுள்ள ஆர்ட் பாடசாலை சுற்றுச்சூழல் மற்றும் காகித பை தயாரிப்பு மற்றும் நன்கொடை குறித்து கற்றுத்தருவார்கள்.
டெல்லியில், என்ஜிஓக்களை சேர்ந்த பலர், மக்களுக்கு விழிப்புணர்வு தருவார்கள். பெங்களூரில் பிளாஸ்டிக் மறு சுழற்சி செய்ய உதவுவார்கள். சென்னையில், 5000 சுகாதார ஊழியர்களுக்கு, 'ஏழை சாப்பாடு' என்ற பெயரில், மதிய சாப்பாடு வழங்கப்படுகிறது.
இந்தியா முழுக்க அக்டோபர் 2ம் தேதி முதல் 8ம் தேதிவரை, இதுபோன்ற நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே நீங்கள் அனைவருமே நண்பர்கள், உடன் வேலை பார்ப்போர், பக்கத்து வீட்டுக்காரர்கள் ஆகியோருடன் இணைந்து நீங்களும் இந்த விழாவில் பங்கேற்க அழைக்கிறோம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications