தென்காசி வேட்பாளர் கிருஷ்ணசாமிக்கு எதிராக வரிந்து கட்டும் தலித் அமைப்புகள்

டாக்டர் கிருஷ்ணசாமி பட்டியலின உரிமைப் போராளி ஆவார். புதிய தமிழகம் என்ற கட்சியின் தலைவராக உள்ளார். இவர் 1996 - 2011ம் ஆண்டுகளில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.
பட்டியலின மக்களின், குறிப்பாக தென்மாவட்ட பட்டியலின மக்களின் பிரச்சனைகளை முன் வைத்து இவரும், இவரது கட்சியும் செயல்பட்டு வருகின்றன. இவர் கோவையில் சங்கீதா என்ற மருத்துவமனையும் நடத்தி வருகின்றார்.
தென்காசி தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் புதிய தமிழகம் வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். மேலும், தனது கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் தொகுதி முழுக்க சூறாவளி சுற்றுப்பயணம் செய்து வாக்கு சேகரித்து வருகின்றார்.
ஏற்கனவே, தலித் மக்களுக்கு உள்இட ஒதுக்கீடு விஷயத்தில் கிருஷ்ணசாமிக்கும், சில தலித் அமைப்புகளுக்கும் இடையே கருத்து மோதல் இருந்து வந்தது. இதன் காரணமாக பல தலித் அமைப்புகள் கிருஷ்ணசாமிக்கு கண்டனம் தெரிவித்தன. இதனையடுத்து, உள்இட ஒதுக்கீடு விஷயத்தில் கிருஷ்ணசாமி தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லை. உறுதியாக இருந்தார்.
இந்த விவகாரத்தை தற்போது கையில் எடுத்துள்ள சில தலித் அமைப்புகள் உள்இட ஒதுக்கீடு விவகாரத்தில் கிருஷ்ணசாமியின் நிலைப்பாட்டை எடுத்துக் கூறி ஒன்றிணைந்துள்ளதாக கூறப்படுகின்றது. இதன் காரணாக அந்த அமைப்புகளை சேர்ந்த சிலர் கிருஷ்ணாமி போட்டியிடும் தென்காசி தொகுதியில் அவருக்கு எதிராக தேர்தல் பிரச்சாரம் செய்து வருவதாக கூறப்படுகின்றது. குறிப்பாக தலித் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் இவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றார்களாம்.
தமிழகத்தில் வெற்றி வாய்ப்பு உள்ள வேட்பாளர்களில் கிருஷ்ணசாமியும் இதுவரை நிலை பெற்று இருந்தார். ஆனால் அவருக்கு எதிராக தலித் அமைப்புகளே வரிந்து கட்டி எதிர்த்து வேலை பார்த்து வருவதால் புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.
மேலும் கிருஷ்ணசாமி இதுவரை அதிமுக கூட்டணியில் இருந்துவிட்டு, தற்போது திமுக முகாம் மாறியுள்ளதால் ஆளும் கட்சியும் அவரது வெற்றிக்கு பல விதத்திலும் முட்டுக் கட்டை போட்டு வருகின்றதாம்.
இது குறித்து கருத்து கூறும் கிருஷ்ணசாமி ஆதரவாளர்கள், அவர் ஒரு அரசியல்வாதி அல்ல. அவர் ஒரு போராளி. அவருக்கு போட்டி வந்தால் தான் நல்ல வேலை பார்ப்பார். எனவே அவர் எளிதில் வெற்றி பெறுவார் என்கின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications