குடிக்க தண்ணீரின்றி தவித்த சென்னையில் தங்கமகன் கட்-அவுட்டுக்கு 100 லிட்டர் பாலாபிஷேகம்
சென்னை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, குடிநீருக்கும் வழியின்றி தவித்த சென்னை இயல்பு நிலைக்கு திரும்பிவரும் நிலையில், தனுஷ் நடித்த தங்கமகன் திரைப்படம் திரையிடப்பட்ட தியேட்டரில் அவரின் கட்-அவுட்டுக்கு 100 லிட்டர் பால் வீணாக கொட்டி தீர்க்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தனுஷ் ரசிகர்களின் இந்த செயல் சமூக வலைத்தளங்களில் கேலிக்குள்ளாக்கியுள்ளது. சிலர் வேதனையாகவும் இந்த கருத்தை கூறியுள்ளனர். மழை, வெள்ளத்தின்போது, அரை லிட்டர் பால் ரூ.200க்கு விற்பனை செய்யப்பட்டதால் வேதனையி்ல இருந்த மக்கள், கட்-அவுட் செய்தியை பார்த்து அதைவிட அதிக வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.
அரைலிட்டர் பாலை 100/200 ரூபாய்க்கு விக்கிறாங்கன்னு பொங்கின #அப்ரசண்டிகளா
தங்கமகன் படத்துக்கு சென்னைல பாலாபிஷேகம் நடந்துச்சாமே எங்க போனிங்க.
— சிம்ம வாகனி (@simmavagani) December 20, 2015 "அரைலிட்டர் பாலை 100/200 ரூபாய்க்கு விக்கிறாங்கன்னு பொங்கின #அப்ரசண்டிகளா தங்கமகன் படத்துக்கு சென்னைல பாலாபிஷேகம் நடந்துச்சாமே எங்க போனிங்க" என இந்த டிவிட் கூறுகிறது.
சென்னை இயழ்பு நிலை'எப்டினு கேட்குறீங்களா?தங்கமகன் படம் ரிலீஸ் எனவே சத்யம் தேட்டர் முன்பு தனுஷின் கட் அவுட்டுக்கு 100 லிட்டர் பால் அபிசேகம்
— dinaex (@dinaex) December 19, 2015 சென்னை இயல்பு நிலை' எப்டினு கேட்குறீங்களா? தங்கமகன் படம் ரிலீஸ் எனவே சத்யம் தியேட்டர் முன்பு தனுஷின் கட் அவுட்டுக்கு 100 லிட்டர் பால் அபிசேகம் என்று கிண்டல் செய்கிறது இந்த டிவிட்.
பத்து நாளைக்கு முதல்ல பச்ச தண்ணீர் கூட இல்லாம தவிச்ச சென்னை லஇன்னிக்கு தங்கமகன் திரைப்பட கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் பன...
Posted by மயிலம் வெ. பாலமுருகன் on Sunday, December 20, 2015
பத்து நாளைக்கு முதல்ல (முன்னால) பச்ச தண்ணீர் கூட இல்லாம தவிச்ச சென்னைல இன்னிக்கு தங்கமகன் திரைப்பட கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் பன்ராய்ங்க. உலகம் பூரா இருந்து உங்களுக்கு உதவி செய்யும் எங்களை எல்லாம் எதை கொண்டு அடித்துக் கொள்ள, சொல்லுங்கடா, என்று, சென்னை வெள்ளத்திற்காக உதவி செய்ததாக கூறும் இந்த நபர் பேஸ்புக்கில் கருத்து கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications