மாரடைப்பால் மரணமடைந்தாரா டான் ஸ்ரீதர்? மகளின் மனுவால் புதுக் குழப்பம்!
தாதா ஸ்ரீதர் தனபாலின் உடலை தமிழகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு அவரது குடும்பத்தார் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தை சேர்ந்த தாதா ஸ்ரீதர் தனபாலன் மாரடைப்பால் உயிரிழந்ததாக அவருடைய மகள் உடலை மீட்டு தமிழகம் கொண்டு வர வலியுறுத்தி அளித்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கொலை, கொள்ளை, ஆட்கடத்தில் உள்ளிட்ட குற்றங்களில் தேடப்படும் குற்றவாளியான தமிழக தாதா ஸ்ரீதர் தனபாலன் கடந்த 2 நாட்களுக்கு மன்னர் கம்போடியாவில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து அவரது உடலை தமிழகம் கொண்டு வர ஸ்ரீதரின் மகன், வழக்கறிஞர் உள்ளிட்டோர் கம்போடியா விரைந்துள்ளனர்.

இந்நிலையில் இறந்த ஸ்ரீதரின் உடலை தமிழகம் கொண்டு வந்து இறுதிச் சடங்குகள் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஸ்ரீதரின் மகள் தனலட்சுமி மனு அளித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளரிடம் அவர் அளித்துள்ள மனுவில் தந்தையின் உடலை காஞ்சிபுரம் கொண்டு வர இந்திய தூதரக அதிகாரிகள் கம்போடியா தூதரக அதிகாரிகளை தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே தனலட்சுமி அளித்துள்ள மனுவில் தந்தை ஸ்ரீதர் மாரடைப்பு காரணமாக மரணமடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீதரின் வழக்கறிஞர் புருஷோத்தமன், மனஅழுத்தத்தில் இருந்த ஸ்ரீதர் தற்கொலை செய்து கொண்டதாக தொலைபேசி மூலம் அளித்தத் தகவல்களில் கூறி இருந்தார்.
இந்நிலையில் ஸ்ரீதரின் மகள் அளித்துள்ள மனுவில் அவர் மாரடைப்பில் மரணமடைந்ததாக கூறியுள்ளது புதிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும் ஸ்ரீதரின் உடலை தமிழகம் கொண்டு வருவதில் தொடர்ந்து சிக்கல் இருப்பதாகவே தெரிகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications