சட்டவிரோத தொலைபேசி இணைப்பு வழக்கு- தயாநிதி மாறனுக்கு ஹைகோர்ட் முன் ஜாமீன்- சிபிஐ கோர்ட்டில் ஆஜர்!!
சென்னை: சட்டவிரோதமாக தொலைபேசி இணைப்புகளை பயன்படுத்தியதாக சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால முன்ஜாமீன் வழங்கியது. இதனைத் தொடர்ந்து சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராகி பிணைத் தொகை செலுத்தி முன்ஜாமீன் பெற்றார் தயாநிதி மாறன்.
மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது, 323 பிராட்பேண்ட் தொலைபேசி இணைப்புகளை முறைகேடாக தனது சகோதரர் கலாநிதி மாறனின் நிறுவனமான சன் டி.வி.க்கு வழங்கியதாக ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதுகுறித்து விசாரணை நடத்துமாறு சி.பி.ஐ.க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து தயாநிதி மாறன், பிஎஸ்என்எல் பொது மேலாளராக இருந்த கே.பிரம்மநாதன், துணைப் பொது மேலாளராக இருந்த எம்.பி.வேலுச்சாமி ஆகியோர் மீது சி.பி.ஐ. போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக தயாநிதி மாறனின் தனிச் செயலாளராக இருந்த வி.கவுதமன், சன் டி.வி.யின் முதன்மை தொழில்நுட்ப அதிகாரி எஸ்.கண்ணன், எலக்ட்ரீஷியன் எல்.எஸ்.ரவி ஆகியோரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.
பின்னர் இந்த மூவரும் ஜாமீனில் வெளிவந்தனர். இதனிடையே இந்த வழக்கில் தயாநிதி மாறனை நாளை ஆஜராகுமாறு சி.பி.ஐ. உத்தரவிட்டிருந்தது.
இதனால் தம்மை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தயாநிதி மாறன் மனுத்தாக்கல் செய்திருந்தார். இம்மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தயாநிதி மாறனுக்கு இன்று 6 வார கால இடைக்கால ஜாமீன் வழங்கியது.
இதனைத் தொடர்ந்து சென்னை சி.பி.ஐ. நீதிமன்றத்தில் இன்று தயாநிதி மாறன் ஆஜரானார். அங்கு பிணைத் தொகை செலுத்தி முன்ஜாமீன் பெற்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications