தயாநிதிமாறனின் சொத்து மதிப்பு வெறும் ரூ.10 கோடி தானாம்: அசையா சொத்தே இல்லையாம்
சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளரான முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனின் சொத்தின் மதிப்பு ரூ.10 கோடி ஆகும்.
நாடாளுமன்ற தேர்தலில் மத்திய சென்னையில் திமுக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் போட்டியிடுகிறார். அவர் சென்னை ஷெனாய் நகரில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
அப்போது அவர் தனக்கு ரூ.10 கோடி சொத்து இருப்பதாக தெரிவித்தார். அவரது சொத்து விவரம் வருமாறு,

கார்
தயாநிதி மாறனிடம் ஒரேயொரு கார் தான் உள்ளதாம். அதன் மதிப்பு ரூ. 13 லட்சத்து 50 ஆயிரம் ஆகும்.

அசையும் சொத்துக்கள்
தயாநிதி மாறனிடம் ரூ. 6 லட்சத்து 13 ஆயிரத்து 454 மதிப்புள்ள தங்க நகைகள் உள்ளன. வங்கிகளில் வைப்புத் தொகை, சேமிப்பு தொகை, பங்குபத்திர முதலீடு, பங்கு முதலீடு, நிறுவன முதலீடு, எல்.ஐ.சி., அஞ்சலக காப்பீட்டுத் தொகை, அறக்கட்டளைகளில் முதலீடுகள் ஆகியவற்றில் இருந்து கிடைக்கும் வட்டி என்று அவருடைய அசையும் சொத்துக்களின் மதிப்பு ரூ.2 கோடியே 58 லட்சத்து 64 ஆயிரத்து 410 ஆகும்.

மனைவி
தயாநிதிமாறனின் மனைவி பிரியாவிடம் 1745 கிராம் தங்க நகைகள், 15 கிலோ வெள்ளி மற்றும் இதர நகைகள் என்று ரூ. 1 கோடியே 76 லட்சத்து 92 ஆயிரத்து 953 மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன.

பிள்ளைகள்
தயாநிதிமாறனின் மகள் திவ்யா பெயரில் ரூ.3 கோடியே 53 லட்சத்து 26 ஆயிரத்து 991 மதிப்புள்ள சொத்துக்களும், மகன் கரண் பெயரில் ரூ. 3 கோடியே 5 லட்சத்து 44 ஆயிரத்து 794 மதிப்புள்ள சொத்துக்களும் உள்ளன.

அசையா சொத்துக்கள்
தயாநிதிமாறனின் அசையும் சொத்துக்களின் மதிப்பு ரூ. 10 கோடியே 94 லட்சத்து 29 ஆயிரத்து 157 ஆகும். அவரிடம் அசையா சொத்துக்களே இல்லை என்று தெரிவித்துள்ளார்.
-
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications