ஆர்.கே.நகரில் காற்றில் பறக்கும் ஜனநாயகம்.. தயாநிதி மாறன் கடும் தாக்கு
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதியில் ஜனநாயகம் கேலிக் கூத்தாக்கப்பட்டு காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது என்று முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் கூறியுள்ளார்.
சென்னை எழும்பூரில் திமுக தலைவர் கருணாநிதி பிறந்த நாளையொட்டி நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. அதில் கலந்து கொண்டு 788 பேருக்கு உதவிகளை வழங்கினார் தயாநிதி மாறன்.

பின்னர் செய்தியாளர்களிடம் தயாநிதி மாறன் பேசுகையில், அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டபோது அதிகம் பாதிக்கப்பட கட்சி திமுக தான். பல சோதனைகளை கடந்து வெற்றி பெற்றவர் திமுக தலைவர் கருணாநிதி. 93வது வயதில் மீண்டும் திமுக தலைவரே தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்பார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஜனநாயக மரபுகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன. சென்ற பொதுத்தேர்தலில் தேர்தல் ஆணையம், தேர்தல் ஆணையம் போலவா நடந்து கொண்டது. பணம் பட்டுவாடா செய்தார்கள். அதை எதிர்த்து நாம் கேள்வி எழுப்பினோம்.
ஊரடங்கு சட்டம் தமிழகத்தில் மட்டும் பிறப்பிக்கப்பட்டது. தேர்தல் ஆணையம் அதிமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டு ஒரு பொய்யான வெற்றியை தந்திருக்கிறது. இப்போதும் அதுவே நடந்து வருகிறது என்றார் தயாநிதி மாறன்.
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications