முடங்கிய நிலையில்... மது அடிமைகளை மீட்கும் அரசு உதவி எண் 10581... தலைமை நீதிபதி அதிருப்தி
சென்னை: மதுபோதைக்கு அடிமையானவர்களை மீட்க அரசு அறிவித்த உதவி எண்கள் செயல்படாததால் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் அதிர்ச்சி அடைந்தார்.
மதுபோதையில் இருப்போரை மீட்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் அரசுகளுக்கு அறிவுறுத்தியிருந்தது. உலக சுகாதார நிறுவன அறிவுறுத்தலை செயல்படுத்த கோரி வழக்கறிஞர் பாலு பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.

வழக்கறிஞர் பாலு என்பவர் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஒரே நேரத்தில் மதுவிலக்கு அமல்படுத்துவது சாத்தியமில்லை, மதுப்பழக்கத்தில் உள்ளவர்களை மீட்பதற்காக இலவச உதவி எண் செயல்படுகிறது எனக்கூறினார்.
இதனையடுத்து அரசு வழக்கறிஞர் அளித்த 10581 என்ற உதவி எண்ணை தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் தொடர்பு கொண்டார். அப்போது உதவி எண் செயல்படவில்லை என்ற தகவல் மட்டுமே வந்ததால் தலைமை நீதிபதி அதிருப்தி அடைந்தார்.
இதனைத் தொடர்ந்து தலைமை நீதிபதி பிறப்பித்த உத்தரவு :
மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர்களை குறைப்பதற்கான பரிந்துரைகளை அமல்படுத்த 2 வாரத்தில் குழு தேவை என்று சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் உலக சுகாதார பரிந்துரைகள் அமல் பற்றி குழு 2 மாதத்தில் அறிக்கை அளிக்க தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் உத்தரவிட்டுள்ளார். தனியார் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து தமிழக அரசு மது அடிமைகளை மீட்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
மதுபோதையில் இருப்போரை மீட்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் அரசுகளுக்கு அறிவுறுத்தியிருந்தது.
வழக்கறிஞர் பாலு தொடர்ந்த இந்த வழக்கு விசாரணையை செப்டம்பர் 16ம் தேதிக்கு ஒத்தி வைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications