இன்ஜினில் தொங்கிய சடலத்துடன் நெல்லை வந்த எக்ஸ்பிரஸ் ரயில்! பயணிகள் பீதி
நெல்லை: ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட இளைஞரின் உடல் சுமார் 6 கிலோ மீட்டர் தூரத்துக்கு தரதரவென இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் இன்று நெல்லையில் நடந்துள்ளது.
பெங்களூரிலிருந்து நாகர்கோயில் செல்லும் தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை 5.45 மணியளவில் ஜங்ஷன் ரயில் நிலையத்திற்கு சென்றது.

ஆனால், ரயிலை பார்த்து சீட் பிடிக்க ஓட வேண்டிய பயணிகளோ, பேயறைந்ததை போல காணப்பட்டனர். காரணம், ரயில் இன்ஜின் முன்பு அகோரமாக தொங்கிக் கொண்டிருந்த ஆண் சடலமாகும்.
ரொம்ப தூரத்துக்கு அந்த சடலம் ரயிலில் இழுத்து வரப்பட்டிருக்கலாம் என்பது பார்த்த உடனேயே புரிந்தது. ஏனெனில், கால்கள் துண்டாகி ரத்தம் வழிந்து நின்று போயிருந்தது. பேண்ட் கிழிந்து உள்ளாடையுடன் அந்த ஆண் சடலம் தொங்கிக் கொண்டிருந்தது.
தகவலறிந்த போலீசார் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ரத்த கறை தொடங்கிய பகுதியை வைத்து பார்க்கும்போது, ஜங்ஷனில் இருந்து சுமார் 6 கி.மீ தொலைவிலுள்ள தட்சநல்லூர் பகுதியில் அந்த வாலிபர் ரயில் முன்பு பாய்ந்திருக்க வேண்டும் என்று யூகிக்கப்படுகிறது. அந்த வாலிபரின் சடலம் பயணிகள் சிலரால் புகைப்படமாக எடுக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications