பார், நம்ம "டெட்பூல்" மெட்ராஸுக்கு வந்து கெட்டுக் குட்டிச் சுவராகி நிற்பதைப் பார்!!!
சென்னை: நீண்டநாட்களுக்குப் பிறகு சூப்பர் பவர் மேன் கான்செப்டில் வெளிவந்துள்ள ஹாலிவுட் படம் ‘டெட் பூல்'.
உலகம் முழுவதும் இந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளது.
இந்நிலையில், நமது சிங்காரச் சென்னைக்கு டெட் பூல் வந்தால், என்னவெல்லாம் செய்வார் என்பதை பேஸ்புக் பக்கமொன்று போட்டோஷாப் மூலம் படங்கள் தயாரித்து வெளியிட்டுள்ளது.
அதில், பக்கா சென்னைவாசியாக மாறி இந்த டெட் பூல் என்னவெல்லாம் செய்கிறார் என நீங்களும் பாருங்களேன்.

பர்ஸ்ட் மெட்ரோ தான்...
முன்பெல்லாம் சென்னைக்கு வருபவர்களின் முதல் சாய்ஸ் செத்த காலேஜ் என்றால், இப்போ மெட்ரோ ரயில் தான். அதிலும், கேப்டன் அருகில் அமர்ந்து பயணம் செய்ய டெல் பூலைத் தவிர வேறு யாருக்குத் தைரியம் வரும்.

ஓடு ராசா ஓடு...
என்றைக்கு நம்மூரில் டவுன் பஸ் ஸ்டாப்பிங்கில் நின்றுள்ளது. இது தெரியாமல் டெட் பூல் பேருந்து பின்னால் ஓடுகிறார் பாருங்கள்.

எங்க என் சீட்...
பேருந்து கிடைக்கவில்லை என்றால், ஷேர் ஆட்டோவில் தானே போயாக வேண்டும். கெத்தாக எப்படி டிரைவரின் பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறார் பாருங்கள்.

மெரினாவில்...
சென்னைக்கு வந்துவிட்டு மெரினாவில் கால் பதிக்காமல் போனால் எப்படி.

எங்க ஏரியா...
எவ்வளவு நேரம் தான் படுத்தே இருப்பது... சின்னதா ஒரு விளையாட்டு!

ஆட்ரா... ஆட்ரா
எப்படி களத்தில் இறக்கி டெட் பூலை குத்தாட்டம் போட வைத்துள்ளார்கள் பாருங்கள்.

தி.நகர் ஷாப்பிங்...
சென்னைக்கு வந்து விட்டு, தி.நகர் ரங்கநாதன் தெருவில் சின்ன கர்சீப்பாவது வாங்காமல் போனால், திரும்ப டெட் பூலை அவர் வீட்டுக்குள்ளேயே விட மாட்டார்கள்.

டாஸ்மாக்...
நெல்லை அல்வா, மனப்பாறை முருக்கு என ஏரியாவிற்கு ஒன்று பிரபலம் என்றால், ஆல் ஏரியாவிலும் கிங் டாஸ்மாக் தான். அங்கு டெட் பூலை நிற்க வைக்காமல் விட்டால், அவரே கனவில் வந்து கதறினாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் என்ன பறக்குது.. போலீசாரை வெகுவாக பாராட்டிய பொதுமக்கள் -
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு












Click it and Unblock the Notifications