10 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் 3 பேருக்கு தூக்கு.. தேனி மகிளா நீதிமன்றம் அதிரடி!
தேனி அருகே 10 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் 3 பேருக்கு அம்மாவட்ட நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
தேனி: பெரியகுளம் அருகே 10 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் 3 பேருக்கு அம்மாவட்ட நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள காமாட்சிபுரத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு 10 வயது சிறுமி திடீரென மாயமானார். இதையடுத்து சிறுமியை தேடிய பெற்றோர் சிறுமி கிடைக்காததால் ஓடைப்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியை தேடினர். அப்போது அங்குள்ள கிணற்றில் சிறுமியின் உடல் சடலமாக கண்டெக்கப்பட்டது.

பலாத்காரம் கொலை
பிரேத பரிசோதனையில் சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக சுந்தர்ராஜ், ரூபின், குமரேசன் ஆகிய மூன்று பேரை சந்தேகத்தின் பேரில் போலீசார் கைது செய்தனர்.

கிணற்றில் உடல்
விசாரணையில் அவர்கள் மூவரும் சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்ததும், உயிருடன் விட்டால் காட்டிக்கொடுத்து விடுவார் என அவரை கொன்று உடலை கிணற்றில் வீசியதும் தெரியவந்தது.

மகிளா நீதிமன்றம்
இதையடுத்து மூன்று பேரும் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர். இதுதொடர்பான வழக்கு தேனி மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

3 பேருக்கு தூக்கு தண்டனை
இந்நிலையில் 4 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கொடூர வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற சுந்தர்ராஜ், ரூபின், குமரேசன் ஆகிய 3 பேருக்கு தூக்கு தண்டனை விதித்தது தேனி மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

தலா 50000 அபராதம்
மேலும் சுந்தர்ராஜ், ரூபின், குமரேசன் ஆகிய 3 பேருக்கும் தலா 50000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்து. சிறுமியின் தாயாருக்கு கருணை தொகை வழங்கவும் தேனி மகிளா நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications