பஞ்சாயத்து தலைவருக்கு கொலை மிரட்டல்: 2 பேர் கைது
தூத்துக்குடி: தூத்துக்குடியில் பஞ்சாயத்து தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள இடையர்காடு பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். அவர் இடையர்காடு பஞ்சாயத்து தலைவராக உள்ளார். நேற்று மாலை பஞ்சாயத்து அலுவலக சுவர் மற்றும் பஸ் நிறுத்த சுவர்களில் ஒரு குறிப்பிட்ட ஜாதி பெயரை குறிப்பிட்டு இது எங்களது கோட்டை என எழுதப்பட்டிருந்தது.

இந்த விளம்பரத்தை பார்த்த பொதுமக்கள் முகம் சுளித்தனர். இது குறித்து பஞ்சாயத்து தலைவருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த அவர் அந்த சுவர் விளம்பரங்களை பார்த்தார்.
பாலகிருஷ்ணன் உடனடியாக சுவரில் எழுதப்பட்டிருந்த வாசகங்களை அழித்து சுத்தப்படுத்தினார். அவர் சுவர் விளம்பரத்தை அழிப்பதை பார்த்து ஆத்திரமடைந்த அதே ஊர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த அன்னராஜன் என்பவரின் மகன்கள் வினோத், ஆறுமுகம் ஆகிய இருவரும் பாலகிருஷ்ணனை அவதூறாக பேசி வாக்குவாதம் செய்தனர்.
மேலும் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து பாலகிருஷ்ணன் ஏரல் போலீசில் புகார் செய்தார். புகாரை பெற்று சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பூமிராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வினோத், அவரது தம்பி ஆறுமுகம் ஆகிய இருவரையும் கைது செய்தார்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications