கொடுங்கையூர் பேக்கரி விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு
சென்னை கொடுங்கையூர் பேக்கரி தீ விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தவர்களில், மேலும் ஒருவர் சிகிச்சைப் பலனிக்காமல் உயிரிழந்துள்ளார். இதனால் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை: சென்னை கொடுங்கையூர் பேக்கரி தீ விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தவர்களில், மேலும் ஒருவர் சிகிச்சைப் பலனிக்காமல் உயிரிழந்துள்ளார். இதனால் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
சென்னை கொடுங்கையூர் மீனாம்பாள் பிரதான சாலையில் உள்ள பேக்கிரியில் கடந்த 15ம் தேதி நள்ளிரவு சமையல் எரிவாயு உருளையில் ஏற்பட்ட கசிவினால் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில், அங்கு தீயை அணைக்க சென்ற ஏகராஜ் என்ற தீயணைப்புப் படை வீரர் பலத்த காயமடைந்து உயிரிழந்தார்.

மேலும் 47 பேர் படுகாயமடைந்தனர். இவர்கள் அனைவரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை, கிரீம்ஸ் ரோடு அப்பல்லோ மருத்துவமனை ஆகியவற்றில் தீவிர சிகிச்சைப் பெறுகின்றனர். இந்த நிலையில், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொடுங்கையூர் பரமானந்தம் என்பவர் புதன்கிழமை இரவு இறந்தார்.
இதற்கிடையே, சம்பவத்தின்போது தீ விபத்தை வேடிக்கை பார்க்க வந்து, தீயில் சிக்கி பலத்த காயமடைந்த கொடுங்கையூர் கண்ணதாசன்நகரைச் சேர்ந்த அபிமன்யு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை அதிகாலை இறந்தார். இதையடுத்து தீ விபத்தில் இறந்தோரின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்தது.
இந்நிலையில், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்து பேக்கரி உரிமையாளர் ஆனந்த் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இதனையடுத்து பலி எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.
சொந்த விருப்பத்தின் பேரில் தனியார் மருத்துவமனைக்குச் சென்ற இரண்டு பேர் மீண்டும் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் 16 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 13 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. ஒருவருக்கு வென்டிலேட்டர் கருவி பொருத்தப்பட்டுள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மகிழ்வன் என்பவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதுவரை 5 பேர் பலியாகியுள்ளதால் கொடுங்கையூர் பகுதியில் பெரும் சோகம் நிலவுகிறது.
-
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications