பாபர் மசூதி இடிப்பு தினம்.. காயல்பட்டினத்தில் கடைகள் அடைப்பு
Subscribe to Oneindia Tamil
காயல்பட்டினம்: பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி இன்று காயல்பட்டினத்தில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
கடையடைப்புக்கு எந்த அமைப்பும் வேண்டுகோள் வைக்கவில்லையெனினும், சில ஆண்டுகளுக்கு முன் சில சமுதாய அமைப்புகளால் வைக்கப்பட்ட வேண்டுகோள் வழமையாக்கப்பட்டு, ஆண்டுதோறும் இந்நாளில் கடைகள் அடைக்கப்படுகிறது.

பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஒரு சில இறைச்சிக் கடைகள் மட்டும் திறந்திருந்தன. மீன் சந்தை அடைக்கப்பட்டிருந்தது. சில சிறு மீன் வணிகர்கள் சந்தைக்கு வெளியில் வணிகம் செய்தனர்.
பாதுகாப்புக்காக ஆங்காங்கே காவல்துறையினர் நிறுத்தப்பட்டிருந்னர். போக்குவரத்து, பள்ளி-கல்லூரிகள் வழமை போல் இயங்கின. விரும்பத்தகாத நிகழ்வுகள் என எதுவுமில்லை.













Click it and Unblock the Notifications