என்னய்யா மதம்... எல்லோரையும் சேர்த்து வைத்த இந்த ''டிசம்பர் 6''!
சென்னை: டிசம்பர் 6... நேற்றைய தினம் ஒவ்வொரு ஆண்டும் ஒட்டுமொத்த இந்தியாவிலும், தலைநகர் சென்னையிலும் பீதியைக் கிளப்பும் நாள். போலீசார் ஆயிரமாயிரமாக பாதுகாப்பு பணியில் குவிக்கப்படும் நாள்.
ஒவ்வொரு வருடமும் பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6ம் தேதியன்று சென்னை ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் என்று அனைத்து முக்கிய இடங்களும் போலீசாரால் சூழப்பட்டு பாதுகாப்பு பணிகளில் அல்லோகலப்படும். இந்த வருடமோ ஒட்டுமொத்த போலீசாரும் மீட்புப் பணியில்தான் மும்முரமாக்கப்பட்டுள்ளனர்.

நீண்டது உதவிக்கரம் மட்டுமே:
இந்த வருட டிசம்பர் 6 சென்னையில் மட்டும் இதுவும் மற்றொரு நாளே என்று அனைத்து வேறுபாடுகளையும் களைந்து ஒருவருக்கொருவர் உதவிக்கரம் நீட்ட வைத்துள்ளது. சற்று கூட அந்த இருட்டு நாளின் சாயல் படியாமல் ஒருவருக்கொருவர் விளக்கினை தங்கள் உள்ளத்தினுள் ஏற்றி வைத்துக் கொண்டுள்ளனர் நேற்று.

எல்லாமே மனதின் எண்ணம்தான்:
ஒருவகையில் யாரோ இரண்டு, மூன்று தவறான மனம் கொண்டவர்களுக்கு பயந்து ஒரு நாளையே நாம் தேவையில்லாத விழிப்புணர்வுக்குரியதாக மாற்றிவிட்டோமோ என்று தோன்ற வைத்துள்ளது இந்த மழை. அப்படிப்பட்ட புகைப்படங்கள்தான் சமூக வலைதளங்களிலும் பரவி வருகின்றது.

எதுவும் தடையில்லை:
அனைத்து மத, இன வேறுபாடுகளையும் கடந்து மனிதம் மட்டுமே நிலைத்து நிற்கின்றது. உணவுப் பொட்டலங்கள் விநியோகிப்பதில் ஆகட்டும், ஆடைகள், அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு சேர்ப்பதில் ஆகட்டும் மதமோ, ஜாதியோ, இனமோ, மொழியோ தடையாக இருக்கவில்லை.

தள்ளி நில்லுங்கள் தயவு செய்து:
இதில் அரசியல் சதுரங்கங்கள் மட்டுமே விதிவிலக்கு. இனியேனும், டிசம்பர் 6ஆம் தேதியினை சாக்காய் வைத்து அரசியல் செய்பவர்கள் ஒழிந்தே போகட்டும். உண்மைதான் ஒரு டிசம்பர் 6 பிரித்து வைத்தது...மற்றொரு டிசம்பர் 6 இணைத்து வைத்துள்ளது!
-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம்












Click it and Unblock the Notifications