நெல்லையில் பலத்த காற்றுடன் மழை.. ஜெ.,வை வரவேற்க வைத்திருந்த அலங்கார வளைவு சரிந்தது
நெல்லை: நெல்லையில் பலத்த காற்றுடன் நேற்று மாலை மழை பெய்ததால் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை வரவேற்க வைத்திருந்த அலங்கார வளைவு சரிந்து விழுந்தது.
தமிழக சட்டசபைக்கு மே 16 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

அதன்படி திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள 20 சட்டசபைத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பாளையங்கோட்டையில் இன்று நடைபெறும் பிரசாரக் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா கலந்துகொள்கிறார்.
இதையொட்டி ஜெயலலிதாவை வரவேற்பதற்காக நெல்லையில் மாவட்ட நீதிமன்றம் அருகே மிகப் பெரிய அளவில் முகப்பு வளைவு வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று மாலை நெல்லையில் இடி, மின்னலுடன் ஒரு மணி நேரம் காற்றுடன் மழை பெய்தது. அப்போது பலத்த காற்று வீசியதால் ஜெயலலிதாவை வரவேற்க வைக்கப்பட்டிருந்த வளைவு சரிந்து விழுந்தது. சாலையில் சரிந்து விழுந்ததால், அதனை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது. இதனால் சுமார் ஒரு மணி நேரம் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
-
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications