அத்தை ஜெயலலிதாவை சசிகலாவோடு சேர்ந்து கொன்ற தீபக்.. தீபா பரபப்பு பேட்டி: வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், அவரது சகோதரி தீபாவை போயஸ் இல்லத்துக்கு வரச்சொல்லி அங்கு குண்டர்களை வைத்துத் தாக்கியதாக தீபா பரபர புகார் தெரிவித்துள்ளார். இதனால் போயஸ் கார்டன் பகுதியே அல்லோகலப்பட்டுக் கொண்டிருக்கிறது.

போயஸ்கார்டனுக்கு தீபாவை வரச்சொல்லி தீபக் குண்டர்களை வைத்து அடித்ததாகத் தீபா பரபரக் குற்றச்சாட்டைக் கூறியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் தீபா கூறியதாவது: இன்று காலை 5 மனீயிலிருந்து பலமுறை தீபக் எனக்கு போன் அடித்து போயஸ்கார்டனுக்கு வரச் சொன்னான். நான் வர மாட்டேன். நான் வந்தால் அங்கு உள்ளே விடமாட்டார்கள் என்றேன்.

 தீபக் தாக்கினான்

தீபக் தாக்கினான்

'நீ வா, நான் உன்னை அழைத்துச் செல்கிறேன் என்று கூறினான். நீ வந்து அத்தை புகைப்படத்துக்கு வந்து மாலை போடு' என்று கூறினான். அதனால் வந்தேன். ஆனால் என்னை உள்ளே விடவில்லை.போராடி உள்ளே சென்றேன். அங்கு தீபக் குண்டர்களை வைத்து தாக்கினான். அப்போது அவர்களைத் தடுக்க முயன்ற ரிபபளிக் தொலைக்காட்சி செய்தியாளர், கேமிராமேனைத் தாக்கினார்கள். அப்போது இங்கு போலீசார் யாரும் இல்லை. இப்போதுதான் நிறையப் பேர் வந்துள்ளார்கள்.

 பயத்தால் மாதவனை அழைத்தேன்

பயத்தால் மாதவனை அழைத்தேன்

அதன்பிறகு நான் என் கணவர் மாதவனுக்கு போன் செய்து எனக்கு பயமாக இருக்கிறது உடனே வாருங்கள் என போன் கூறினேன். அவரும் வந்தார். ஆனால் அவரையும் தாக்க முயன்றார்கள். உள்ளே இருக்கும் குண்டர்கள் யாருடைய ஆட்கள் என தெரியவில்லை. ஆனால் சபாரி போட்ட குண்டர்கள் இருக்கிறார்கள்.

 சசிகலா புறம்போக்கு

சசிகலா புறம்போக்கு

சசிகலா ஒரு புறம்போக்கு, தீபக் பணத்துக்காக அவர்களுடன் சேர்ந்துகொண்டு அத்தையை கொன்றுவிட்டான். இதுகுறித்து நான் போலீசில் புகார் செய்வேன். பிரதமர் மோடியிடமும் இந்த தாக்குதல் குறித்து புகார் செய்வேன்.

 மோடியிடம் புகார் செய்வேன்

மோடியிடம் புகார் செய்வேன்

போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா நிலைய இல்லத்தை நான் சட்டப்படியாகப் போராடி பெற்றுக்கொள்வேன். என்னை குண்டர்களை வைத்து அடித்த தீபக்கை சும்மா விடமாட்டேன். அவன் சசிகலாவுடன் சேர்ந்துதான் இதைச் செய்தான்.

இந்த ஆட்சி தொடரக் கூடாது

இந்த ஆட்சி தொடரக் கூடாது. மக்கள் இந்த ஆட்சியை அகற்றப் போராட வேண்டும் என ஆவேசமாகப் பேசினார். பேசும்போது மிகவும் உணர்ச்சிவசப்பட்ட மனநிலையிலும் தீபா இருந்தார். பேசத் திராணியற்று பலமுறை பெருத்த இருமலுடன் பேசினார் தீபா.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Jayalalitha niece Deepa entered into Poes garden and she has been beaten by gundas and she told her Brother is planned with Sasikala and hit her.
Please Wait while comments are loading...