ஜெ. அண்ணன் மகள் தீபாவிற்கு கும்பகோணத்தில் பெருகும் ஆதரவு - அதிகரிக்கும் போஸ்டர்கள்
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவிற்கு கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோயில், திருநரையூர் பகுதிகளில் பேனர்கள் குவிந்து கொண்டிருக்கின்றன
சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்குப் பின்னர் அதிமுகவின் பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் சசிகலா. அதிமுக தொண்டர்களில் சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
சசிகலாவின் தலைமையை பிடிக்காத சில தொண்டர்கள், ஜெயலலிதாவின் அண்ணன் மகள்
தீபாவை முன்னிறுத்தி போஸ்டர்கள் அடித்து வருகின்றனர்.

அம்மாவின் குல விளக்கே.. ஆளப் பிறந்தவளே.. தமிழகத்தின் இதய துடிப்பே.. என்றும் சின்னத்தாயே என்றும் அழைக்கின்றனர். தென்மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான தொண்டர்கள் சென்னைக்கு வந்து தீபாவிற்கு வீடு முன்பாக குவிந்து வருகின்றனர். அரசியலுக்கு வருமாறு அழைத்து வருகின்றனர்.
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவே அதிமுகவை வழிநடத்தவேண்டும் என்றும்
தமிழகம் முழுவதும் தீபாவுக்கு ஆதரவாகவும், சசிக்கு எதிராகவும் போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர்.
இந்த சூழலில் கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோயில், திருநரையூர் பகுதிகளில் தீபாவுக்கு ஆதரவான பேனர்கள் குவிந்து கொண்டிருக்கின்றன. அங்குள்ள பிலக்ஸ் பேனர்ளில் "தொண்டர்கள் இருப்பது உங்கள் பக்கம், துரோகியிடம் இருப்பது அடிமை வர்க்கம்" என தலைப்பிட்டு வைத்துள்ளனர். இந்த பேனர்கள் பரபரப்பை உண்டாக்கி வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications