ஃபேஸ்புக்கில் வாரி சுருட்டி பத்திரிகையாளருடன் சண்டைக்கு போன தீபா.. காரணத்தை பாருங்க!
முதல்வர் வேட்பாளர்கள் விவகாரம் தொடர்பாக பத்திரிகையாளர் ஒருவருடன் சண்டைக்கு போய்விட்டார் தீபா.
Recommended Video

சென்னை: எனக்கு அட்வைஸ் செய்தால் எவனாக இருந்தாலும் தூக்கி மூஞ்சில அடிச்சிருவேன் என பிரகடனம் செய்த தீபா ஃபேஸ்புக்கில் பத்திரிகையாளர் ஒருவருடன் வரிந்து கட்டிக் கொண்டு சண்டை போட்டிருக்கிறார்.
தமிழக அரசியலில் தமக்கும் ஒரு இடம் இருக்கிறது; தமக்கும் ஆதரவு இருக்கிறது என பெரும் நம்பிக்கையில் இருக்கிறார் தீபா. தீபாவுக்கு போட்டியாக அவரது கணவர் மாதவன் ஒரு கட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்.
தீபாவின் நண்பர் ராஜாவுக்கும் மாதவனுக்கும் இடையே எப்போதும் அக்கப் போர்தான்.. பொது இடம் என்று கூட பார்க்காமல் மாதவனை ராஜா ஏக வசனத்தில் பேசினாலும் 'நண்பராச்சே' என கண்டுகொள்ளாமல் இருப்பார் தீபா.

மிரட்டல் விடுத்த தீபா
அண்மையில் டிவி பேட்டி ஒன்றில்தான் எனக்கு அட்வைஸ் செய்தால் எவனாக இருந்தாலும் தூக்கி மூஞ்சில அடிச்சிருவேன் என மிரட்டல் விடுத்திருந்தார். இந்நிலையில் தற்போது ஃபேஸ்புக்கில் தானாக வலிய போய் பஞ்சாயத்தை கூட்டியிருக்கிறார் தீபா.

பத்திரிகையாளரின் ஃபேஸ்புக் போஸ்ட்
மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் இளையசெல்வன் தமது ஃபேஸ்புக் பக்கத்தில், தமிழகத்தில் 8 முதல்வர் வேட்பாளர்கள் ! என்ற தலைப்பில் ஒரு பதிவிட்டிருந்தார்.

எட்டு முதல்வர் வேட்பாளர்கள்
அதில், மு.க.ஸ்டாலின், தினகரன், டாக்டர் அன்புமணி, ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சீமான், எடப்பாடி-பன்னீர். ஆகியோர் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. இதில் பலரது பெயரும் இல்லை என இப்பதிவிலேயே கருத்துகளும் போடப்பட்டிருந்தன.

நாங்க எல்லாம் சிஎம் வேட்பாளர்கள் இல்லையா?
திடீரென தீபா, Deepa Jayakumar என்ற ஐடியில் இருந்து பொங்கி இதில் பதிவிட்டிருக்கிறார். 'ஏன் பேரு, மாதவன் பேரு எதுக்கு? டிடிவி, திவாகர், கிருஷ்ணபிரியா, விவேக் காசுகொடுத்தாங்க பேர் சொல்லிட்டு போங்க... அவங்கெல்லாம் கூண்டோடு சேர்ந்து காப்பாத்துனாங்க இல்லையா? மிஸ்டர் இளையசெல்வன் என எகிறியிருக்கிறார். இதேபோல் ஊடகங்களை விமர்சித்து அடுத்து ஒரு பதிவும் போட்டார்.

நீங்க முதல்வர் வேட்பாளரா?
தீபாவின் இந்த திடீர் பொங்கலுக்கு பத்திரிகையாளர் இளையசெல்வன் பதில் அளிக்கும் வகையில் ஒரு கேள்வி கேட்டார். அது இதுதான்... " உங்கள் மனசாட்சியைக் கேட்டுப்பாருங்கள் , மேடம்!!! நீங்கள் முதல்வர் வேட்பாளரா? என்பதுதான். Deepa Jayakumar தரப்பில் இருந்து எந்த பதிலும் இல்லை கப்சிப்.
என்னா கோபம்!












Click it and Unblock the Notifications