தீபாம்மா கட்சி தொடங்கி ஒரு வருஷம் ஆயிடுச்சு! இதுவரைக்கும் என்னதான் செஞ்சிருக்காங்க?
தீபா கட்சி ஆரம்பித்து ஓராண்டாகியுள்ள நிலையில் அவர் இதுவரை என்ன செய்துள்ளார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை: தீபா கட்சி ஆரம்பித்து ஓராண்டாகியுள்ள நிலையில் அவர் இதுவரை என்ன செய்துள்ளார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மீடியா வெளிச்சத்துக்கு வந்தார் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா.
ஜெயலலிதா மரணம் தொடரபாக சசிகலா குடும்பத்தினர் மீது தீபா கூறிய அதிரடி குற்றச்சாட்டுகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜெயலலிதாவின் அண்ணன் மகள், ஜெயலலிதா போன்ற உருவ அமைப்பு ஆகியவை தீபாவுக்கு அதிமுகவினரிடையே பெரும் வரவேற்பை கொடுத்தது.

தீபாவின் அரசியல் ஆசை
தீபாவின் வீட்டிற்கு முன்பு திரண்ட கூட்டம் மற்றும் மக்களிடையே கிடைத்த வரவேற்பு உள்ளிட்டவை தீபாவுக்குள் அரசியல் ஆசையை தூண்டியது. இதைத்தொடர்ந்து சசிகலாவுக்கு எதிராக தர்மயுத்தம் தொடங்கிய ஓபிஎஸுடன் கூட்டு சேர்ந்தார் தீபா.

பேரவையை தொடங்கிய தீபா
இடையில் என்ன ஆனதோ தெரியவில்லை திடீரென ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸை கடுமையாக விமர்சிக்க தொடங்கினார் தீபா. இதைத்தொடர்ந்து 2016ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி ஜெயலலிதாவின் பிறந்த நாளன்று தீபா, எம்ஜிஆர், அம்மர், தீபா பேரவை என்ற பேரவையை தொடங்கினார்.

இப்படி ஒரு கட்சி உள்ளதா?
அவரது இந்த பேரவை சமூக வலைதளங்களில் படாதபாடு பட்டது. கட்சி தொடங்கி ஓராண்டு ஆகிவிட்டது. ஆனால் பலருக்கும் இப்படி ஒரு கட்சி உள்ளதா என்று கூட தெரியாத அளவுக்கு தான் தீபாவின் பேரவை உள்ளது.

இன்னும் எதற்கு?
பேரவை தொடங்கிய ஓராண்டில் அதிகளவு குடும்பச்சண்டையில் ஈடுபட்டதும், ஏராளமான மோசடி புகார்களுக்கு உள்ளானதுமே தீபாவின் சாதனையாக உள்ளது. தீபா ஒரு மோசடி பேர்வழி எனக்கூறி பலர் பாதியிலேயே பிய்த்துக்கொண்டு ஓடிய நிலையில், இப்படி ஒரு பேரவை இன்னும் எதற்கு என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications