அதிமுக தலைவர்களுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தினேனா? தீபா ஆவேசம்
அதிமுக தலைவர்களுடன் ரகிசியமாக பேச்சுவார்த்தை நடத்தியதாக வெளியான தகவலை ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா மறுத்துள்ளார்.
சென்னை: அதிமுக தலைவர்களுடன் ரகசிய பேச்சு நடத்தியதாக வெளியாகி இருக்கும் தகவல் தவறானது என்று ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா மறுத்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சகோதரரின் மகளான தீபாவை அரசியலுக்கு வருமாறு அதிமுக தொண்டர்கள் பலர் அழைப்பு விடுத்துள்ளனர். அவ்வப்போது அவர் வீட்டின் முன்பு கூடி தீபாவை அரசியலுக்கு வருமாறு கூறுகிறார்கள்.

தினமும் வெளியூர்களில் இருந்தும் ஏராளமான தொண்டர்கள் தீபா வீட்டுக்கு முன்பு குவிகிறார்கள். தினமும் மாலையில் தொண்டர்கள் மத்தியில் பேசுவருகிறார். இதற்கிடையே அதிமுக மேலிட தலைவர்கள் சிலருடன் தீபா ரகசிய பேச்சு நடத்தி வருவதாகவும் அவர்களை தீபா பேரவைக்கு இழுக்க முயற்சிப்பதாகவும் தகவல் பரவி வருகிறது.
இந்நிலையில் இது குறித்து தீபா கூறுகையில், நான் நானாகவே இருக்கிறேன். நான் அதிமுக தலைவர்களுடன் ரகசிய பேச்சு நடத்தியதாக வெளியாகி இருக்கும் தகவல் தவறு. அடிப்படை ஆதாரமற்றது.
தினமும் எனது வீட்டின் முன்பு ஏராளமான தொண்டர்களை பார்க்கிறேன். என்னை நம்பி வரும் அவர்களுக்கெல்லாம் நான் என்ன கைமாறு செய்யப் போகிறேன். அதே நேரத்தில் அவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை வந்து விடுமோ என்ற அச்சமும் உள்ளது. தற்போது அவர்களின் கருத்துக்களை கேட்டு வருகிறேன் என்றார்.
-
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம்












Click it and Unblock the Notifications