பொருளாளராக இருந்த தீபா செயலாளர் ஆனதன் பரபர பின்னணி
எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் பொருளாளராக இருந்த தீபா தானே செயலாளராகவும் இருக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.
சென்னை: எம்ஜிஆர், அம்மா, தீபா பேரவையின் செயலாளராக நியமிக்கப்பட்ட ராஜாவுக்கு எதிர்ப்பு கிளம்பியதால் ஜெ.தீபாவே அந்த பொறுப்பை வகிக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.
கடந்த 24ஆம் தேதி ஜெ.தீபா, எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையை தொடங்கினார். தான் பொருளாளர் என்று அறிவித்தார். தொடர்ந்து சில நிர்வாகிகளையும் அவர் நியமித்தார்.

இந்நிலையில் பேரவையின் செயலாளர் ராஜா பலருக்கு பதவி வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் சென்னை தியாகராய நகரில் உள்ள வீட்டின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ராஜாவுக்கு எதிராக முழக்கமிட்ட அவர்கள் ராஜாவை பேரவை செயலாளராக ஏற்க முடியாது என்றனர். அவர் ஒன்றும் யோக்கியமானவர் இல்லை என்றும் அவர்கள் கூறினர்.
காலை 11 மணியிலிருந்து போராட்டம் நடந்ததையடுத்து தீபா இன்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தார். நானே பேரவையின் செயலாளராக செயல்படுவேன் என்று கூறினார்.
விரைவில் புதியவர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் தீபா தெரிவித்தார்.. நாளை மாலை அறிவிக்கப்படும் என்றார். செய்தியாளர்கள் சந்திப்பின்போதே பலர் உள்ளே புகுந்து கோஷமிட்டனர். ராஜா பணம் வாங்கிக் கொண்டு பலரை ஏமாற்றியதாக அவர்கள் வேதனை தெரிவித்தனர்.
நிர்வாகிகள் குறித்து ஆரம்பத்திலேயே பெரிய அளவில் எதிர்ப்பு உருவானதால்தான் எடுத்த எடுப்பிலேயே சிக்கல் வரக் கூடாது என்ற எண்ணத்தில்தான் ராஜாவை தீபா நீக்கி விட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் தீபாவின் அறிவிப்பு வெளியான பிறகும் கூட பலர் தீபா வீட்டின் முன்பு ராஜாவுக்கு எதிராக கோஷமிட்டபடி காணப்பட்டனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications